விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்

விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்

1 mins read

முன்பெல்லாம் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கதாநாயகிகள் முட்டி மோதுவர். ஆனால், அண்மைகாலமாக, விஜய் படங்களில் நயன்தாரா போன்ற முன்னணி கதாநாயகிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப் படாத நிலையில், படத்தில் இரண்டாவது நாயகி போல் நடிப்பவர்களை ஓரிரு காட்சிகளில் மட்டுமே நடிக்க வைத்தனர். இந்நிலையில், தற்போது விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தில் 'இரண்டாவது நாயகி வேடம்' என்று சொல்லி சில இளவட்ட நாயகிகளை நடிப்பதற்கு அழைத்தனர். ஆனால், அவர்களோ "இரண்டாம் நாயகியா?" என்று கேட்டுவிட்டு, "இரண்டு காட்சிகளில்தான் நடிக்க வைப்பீர்கள். விஜய் படம் என்பதற்காக இருக்கிற வாய்ப்புகளையும் கெடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை," என்று சொல்லி சிக்காமல் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால், விஜய் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.