'திருடிய அனுபவம் உள்ளது'

'திருடிய அனுபவம் உள்ளது'

1 mins read
fb544e5c-06fc-4617-9d5d-b8ca5fdd2601
-

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான 'சக்ரா' திரைப்படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி உள்ளார் ரெஜினா கசாண்ட்ரா. இவரது நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், "ஒரே மாதிரியான கதைகளில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதைகளையும் வேடங் களையும் தேர்வு செய்து நடிப்பதில் தான் எனக்கு அலாதி பிரியம்," என்று கூறியுள்ள ரெஜினாவிடம், "சின்ன வயதில் நீங்கள் ஏதாவது திருடிய அனுபவங்கள் உண்டா?" என்று கேட்கப்பட்டது.

இதற்கு அவர் கொஞ்சம்கூட மறைக்காமல் பதில் அளித்து உள்ளார். "ஒருமுறை பேரங்காடி யில் ஒரு பொருளை திருடுவதற்கு எனது நண்பர்கள் திட்டம் போட்டனர். ஆனால், இதுபோன்ற திருட்டு விவகாரங்களில் எனக்கு அறவே விருப்பமில்லை. ஆனால், எனது காதலருடன் ரகசியமாகப் பேசுவதற்கு எனது பெற்றோரின் கைபேசியைத் திருட்டுத்தனமாக எடுத்து எனது சின்ன சின்ன ஆசைகளை அவ்வப்போது நிறைவேற்றிக் கொண்டுள் ளேன்," என்றார் ரெஜினா.

ரெஜினா கசாண்ட்ரா