நடிகர் ஆர்யா ரூ.70 லட்சம் சுருட்டியதாக மோசடி புகார்

திரு­ம­ணம் செய்து கொள்­வ­தா­க ஆசை வார்த்தை கூறி தன்னிடம் ரூ.70 லட்­சத்­தை மோசடி செய்து விட்டதாக நடி­கர் ஆர்யா மீது ஜெர்­ம­னி­யில் வசிக்­கும் பெண் ஒரு­வர் புகார் அளித்­துள்­ளார்.

தமிழ் சினி­மா­வில் முன்­னணி நடி­க­ராக வலம் வரும் ஆர்யா, இப்­போது ‘டெடி’, ‘எனிமி’, ‘சார்­பட்டா பரம்­பரை’ உள்­ளிட்ட படங்­க­ளி­லும் ‘புஷ்பா’ என்ற தெலுங்குப் படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், ஆர்யா மீது ஜெர்­மன் பெண் புகார் அளித்­துள்­ளார். இலங்­கை­யைச் சேர்ந்த தமிழ்ப் பெண்­ணான விட்ஜா என்­ப­வர் ஜெர்­மனி நாட்­டில் சுகா­தா­ரத்­து­றை­யில் பணிபுரிந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நடி­கர் ஆர்யா, கொரோனா ஊர­டங்கு நேரத்­தில் தன் கையில் தற்­போது படம் இல்லை என்­றும் பணத்­திற்­காக சிரமப்ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.

அத்துடன், தன்னை விரும்­பு­வ தா­க­வும் திரு­ம­ணம் செய்­துகொள்ள ஆசைப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.

“ஆர்யாவின் ஆசை வார்த்தை களை நம்பி நானும் அவரது பெய ருக்கு ரூ.70,40,000 பணத்தை அனுப்பி வைத்தேன்.

“ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர், திரு­ம­ணம் செய்துகொள்ள மறுத்­த­தோடு, பணத்­தை­யும் திருப்பிக் கொடுக்­க­வில்லை,” என்று குற்­றஞ்­சாட்­டி உள்ளார் விட்ஜா.

இது­தொ­டர்­பாக பிர­த­மர், அதி­பர் அலு­வ­ல­கங்­க­ளுக்கும் இணையம் வழி புகார் அளித்­துள்­ளார்.

அத்துடன், ஆர்­யா­வுக்கு பணம் அனுப்­பிய பணப் பரி­வர்த்­தனை களுக்­கான ஆதா­ரங்­க­ளை­யும் அவ­ரது தாயார் தம்மை மோச­மாக திட்­டிய ஆதா­ரங்­க­ளை­யும் புகா­ரு­டன் விட்ஜா இணைத்­துள்­ள­தா­க­வும் தெரி­யவந்துள்ளது.

இந்தப் புகார் குறித்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உள்­துறை அமைச்­ச­கம் தமி­ழக அர­சுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

உள்­துறை அமைச்­சக செய­லா­ளர் கோபால் ஜா, தமிழ்­நாடு முதல் வரின் தனிப்­பி­ரிவு சிறப்பு அதி­காரி சர­வ­ண­வேல்­ராஜ் ஐஏஎஸ்சுக்கு இந்தப் புகாரை அனுப்­பி­யுள்­ளார்.

இந்நிலையில், தமி­ழக அரசு இந்த விவகாரம் தொடர்பில் சரி யான நட­வ­டிக்கை எடுக்­கும் என்று நம்­பு­வ­தா­க­ விட்ஜா கூறியுள்­ளார்.

இவ்விஷ­யத்­தில் பிர­த­மர் அலு­வ­ல­க­மும் உள்­துறை அமைச்­ச­க­மும் தலை­யிட்­ட­தால் தமக்கு நியா­யம் கிடைக்­கும் என்று நம்­பு­வ­தா­கக் கூறியுள்ள விட்ஜா, தற்­போது ஆர்யா மீது கொடுத்­துள்­ள­ புகாரை மீட்டுக்கொள்ள வேண்­டும். இல்லை­யேல் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவ­தா­க ஆர்யா தன்னை மிரட்­டு­வ­தா­க­வும் விட்ஜா குற்­றம்சாட்டி­ உள்­ளார்.

நடி­கர் ஆர்யா எப்­படி நாட­கம் போட்­டா­லும் தனது புகாரை மீட்டுக் கொள்ளப் போவ­தில்லை என்­றும் கடந்த சில வரு­டங்­க­ளாக நான் பட்ட துய­ரத்­துக்கு அளவே இல்லை என்­றும் விட்ஜா கூறியுள்­ளார்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் விட்­ஜா­வி­டம் இருந்து ரூ.70 லட்­சம் ரூபாய் பணத்தை வெஸ்­டர்ன் யூனி­யன் மூலம் ஆர்யா தனது மேலா­ளர் முக­மது ஹூசைனி என்­ப­வ­ரது வங்கிக் கணக்­கில் பெற்­றது உறுதி­யாகி உள்­ள­தாகக் கூறப்­படும் நிலை­யில், இந்தப் புகார் குறித்து விளக்­கம் பெற ஆர்­யாவை தொடர்பு கொண்டபோது அவர் கருத்து தெரி­விக்க மறுத்­து­விட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!