ஒரு படம்; ஆறு நாயகிகள்

ஆதிக் ரவிச்­சந்­தி­ரன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் புதுப்­ப­டம் 'பகீரா'. பிர­பு­தேவா நாய­க­னாக நடிக்­கும் இப்­ப­டத்­தில் மொத்­தம் ஆறு நாய­கி­கள். அவர்­க­ளுள் அமைரா தஸ்­தூ­ருக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு அண்­மை­யில் வெளி­யாகி ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

"முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­பைப் பார்த்த பின்­னர் இது உளவியல் சார்ந்த, திகில் நிறைந்த படம் என்று எண்­ணத் தோன்­றும். அதில் தவ­றில்லை. ஆனால், வெறும் திகில் பட­மாக மட்­டுமே கரு­தி­விட முடி­யாது. பல்வேறு அம்­சங்­க­ளைக் கொண்ட படம் இது.

"மனதளவில் பாதிக்­கப்­பட்­டுள்ள ஒரு­வன் தனது அன்­றாட வாழ்க்­கை­யில் என்­ன­வெல்­லாம் செய்­கி­றான் என்­பதை அல­சி­யுள்­ளோம்.

"இதில் பிர­பு­தேவா இரட்டை வேடங்­களில் நடிக்­கி­றார் எனும் சந்­தே­கம் சில­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­க­லாம். என்­னால் அதை இப்­போதே உறுதி செய்ய இய­லாது," என்­கி­றார் இயக்­கு­நர் ஆதிக்.

இதில் பிர­பு­தேவா எதிர்­மறை கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றா­ராம். அவ­ருக்கு கதை சொல்­லச் சென்­ற­போது எதிர்­மறை வேடம் என்­ற­தும் மறுத்­து­வி­டு­வார் என்­று­தான் ஆதிக் நினைத்­துள்­ளார். ஆனால், அவர் கொஞ்­சம் கூடத் தயங்­கா­மல் நடிக்க சம்­ம­தித்­தா­ராம்.

"எனது ஒளிப்­ப­தி­வாளர் அபி­நந்­தன் ராமா­னு­ஜன்­தான் பிர­பு­தே­வா­வி­டம் சென்று பேசு­மாறு என்னை ஊக்­கப்­ப­டுத்­தி­னார்.

"இத­னால் இயக்­கு­நர் ஏ.எல். விஜய் அண்­ணாவிடம் உதவு­மாறு கேட்டுக் கொண்­டேன். அவர்­தான் பிர­பு­தேவா சாரை சந்­திக்க வைத்­தார்.

"அவ­ரது கதா­பாத்­தி­ரம் குறித்து பிர­பல உளவியல் வல்லுநரி­டம் கலந்­தா­லோ­சித்­தேன். அவர் சில கருத்­து­க­ளை­யும் ஆலோ­ச­னை­க­ளை­யும் முன்­வைத்­தார். அதன்­மூ­லம் படத்­தில் உள்ள சில கதா­பாத்­தி­ரங்­களை என்­னால் மெரு­கேற்ற முடிந்­தது," என்­கி­றார் ஆதிக்.

சிறு வயது முதலே இவ­ருக்கு சைக்­கோ ­தனம் நிறைந்த கதா­பாத்­தி­ரங்­க­ளைக் கொண்ட படங்­க­ளைப் பார்க்க பிடிக்­கு­மாம். அத­னால்­தான் அத்­த­கை­ய­தொரு படத்தை இயக்க விரும்­பி­யுள்­ளார்.

"இந்­தப் படத்­தில் ஆறு கதா­நா­ய­கி­கள் உள்­ள­னர். அமைரா தஸ்­தூர் முதன்மை நாய­கி­யாக நடிக்க ரம்யா நம்­பீ­சன், ஜனனி அய்­யர், காயத்ரி சங்­கர், சஞ்­சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்­வால் ஆகி­யோ­ரை­யும் திரை­யில் காண முடி­யும்.

"அமைரா தஸ்­தூர் மனோதத்­துவ நிபு­ண­ராக வரு­கி­றார். என்­னைப் பொறுத்­த­வரை எந்­த­வொரு மனி­த­னுக்­கும் வாழ்க்­கை­யில் ஒரே ஒரு காதல் அத்­தி­யா­யம்­தான் இருக்­கும் என்­பதை ஏற்க இய­லாது. எனது முதல் படத்­தி­லும்­கூட இக்­க­ருத்­தைச் சொல்லி இருக்­கி­றேன்.

"இளை­ஞன் ஒரு­வன் துரு­துருப்­பாக இருந்­தால் அவ­னைப் பற்றி அறிந்­து­கொள்ள பெண்­கள் விரும்­பு­வார்­கள். அத்­த­கைய இளை­யர்­களில் பகீ­ரா­வும் ஒரு­வன். என­வே­தான் இத்­தனை கதா­நா­ய­கி­கள் உள்­ள­னர்.

"அமை­ரா­வைப் பொறுத்­த­வரை உளவியல் வல்லுநர் கதா­பாத்­தி­ரத்­துக்­குப் பொருத்­த­மா­ன­வ­ராக இருப்­பார் என நினைத்­தேன். இதே­போல்­தான் மற்ற கதா­பாத்­தி­ரங்­களும் தங்­கள் பங்­க­ளிப்பை அளிப்­பர். ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நான் தேர்வு செய்ய குறிப்­பிட்ட ஒரு கார­ணம் உள்­ளது," என்­கி­றார் ஆதிக்.

இந்­தப் படம் 'சிகப்பு ரோஜாக்­கள்' போல் இருக்­கும் என்­றும் அந்­தப் படத்­தின் மறு­ப­திப்பு என்­றும் சமூக வலைத்­த­ளங்­களில் பேசப்­ப­டு­கிறது. ஆனால், ஆதிக் ரவிச்­சந்­தி­ரன் இதை­யெல்­லாம் திட்­ட­வட்­ட­மாக மறுக்­கி­றார்.

"சைக்கோ வகை திகில் படங்­க­ளுக்கு என குறிப்­பிட்ட சில வரை­ய­றை­கள், அக­ராதி உள்­ளன. நூறு ஆண்டு கால­மாக உள்ள இந்­திய சினி­மா­வில் சொல்­லப்­ப­டாத கதைக்­க­ளங்­களே இல்லை. எனவே, அவற்­றி­லி­ருந்து ஒட்­டு­மொத்­த­மாக மாறு­பட்டு ஒரு கதை­யைச் சொல்­லி­விட முடி­யாது.

"'சிகப்பு ரோஜாக்­கள்' அரு­மை­யான முதன்­மை­யான தமிழ் சினிமா படைப்­பு­களில் ஒன்று. அந்­தக் கோணத்­தில் சொல்­லப்­பட்ட கதை­கள் மிகக் குறைவு. என­வே­தான் எதற்­கெ­டுத்­தா­லும் அத­னு­டன் இணைத்­துப் பேசு­கி­றார்­கள்.

"ஆனால், 'பகீரா' உளவியல் சார்ந்த திகில், படம் என்­றா­லும் முற்­றி­லும் வித்­தி­யா­ச­மான கோணத்­தில் சொல்­லப்­படும் கதை," என்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!