மீண்டும் நடிப்புலகில் தடம் பதிக்கும் வடிவேலு

மீண்டும் நடிப்புலகில் தடம் பதிக்கும் வடிவேலு

1 mins read
77ef2dd8-f828-4552-96d7-5a3b496e5b03
-

இயக்குநர் திருமுருகனின் படத்தில் வடிவேலுவின் (படம்) திரைப் பயணம் மீண்டும் ஆரம்பமாகப் போவதை அறிந்து ேகாலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவரது முதல் திரைப்படமான பரத், கோபிகா நடித்த 'எம்டன் மகன்' படத்தில் வடிவேலு நடித்தி ருந்தார். அந்தப் படத்தின் நகைச் சுவைக் காட்சிகள் நல்ல வர வேற்பைப் பெற்றிருந்தன. அடுத்த படமான 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படத்திலும் வடிவேலு நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கே படம் இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கும் திருமுருகன் தனது மூன்றாவது படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க உள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் பெயர், நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.