தமிழகத் தேர்தல் மற்றும் சில பிரச்சினைகள் காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில படங்களின் வெளியீட்டிலும் குழப்பம் நீடிக்கிறது. மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் சிவகார்த்தி கேயனின் 'டாக்டர்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் ரம்ஜானையொட்டி மே 13 அல்லது 14ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இம்மாதம் 26ஆம் தேதி உலகெங்கும் வெளியிட உள்ளது. மே 14ஆம் தேதி சிம்புவின் 'மாநாடு', விக்ரமின் 'கோப்ரா' படங்களும் வெளியிடப்பட இருந்தன. ஆனால், இப்போது 'டாக்டர்' படம் மே மாதம் வெளியிடப்பட உள்ளதால் 'கோப்ரா' படத்தின் வெளியீடு ஓரிரு வாரங்கள் முன்பின் தள்ளிப் போகலாம் என்றும் சிம்பு, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் போட்டிபோடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 26ல் தனுஷின் 'ஜகமே தந்திரம்' வெளியீடு
1 mins read
-

