பாலிவுட் நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி

பாலிவுட் நடிகையை களமிறக்கிய அண்ணாச்சி

1 mins read
f5a0dea6-6a6a-4d61-8917-3b66afbc49f6
-

தனது கடை விளம்­பரப் படங்­களில் முன்­னணி நடி­கை­க­ளு­டன் நடித்து வந்த சர­வணா ஸ்டோர்

அண்­ணாச்சி, 'உல்­லா­சம்', 'விசில்' படங்­களை இயக்­கிய ஜேடி ஜெர்ரி இயக்­கும் ஒரு படத்தை அதிக பொருட்­செ­ல­வில் தயா­ரிப்­ப­து­டன் நாய­க­னா­க­வும் நடித்து வரு­கி­றார்.

இந்­தப் படத்­தில் தன்­னு­டன் நடிப்­

ப­தற்கு நயன்­தாரா போன்ற முன்­னணி நடி­கை­க­ளுக்கு தூதுவிட்­டார் அண்­ணாச்சி. ஆனால் யாரும் உடன்­படவில்லை.

அத­னால் வெறுத்­துப்­போன

அண்­ணாச்சி, தற்­பொழுது கோலி­வுட் நடி­கை­களே எனக்குத் தேவை­யில்லை என்று சொல்­லிவிட்டு பாலி­வுட்­டில் இருந்து ஊர்­வசி

ரவுத்­தேலா என்ற நடி­கையை அழைத்து வந்து கோலி­வுட்­டில் இறக்­கு­மதி செய்யத் தயா­ராகி

விட்­டார்.

அதை­ய­டுத்து கோலி­வுட் நடி­கை­கள் எல்லாம் மிரண்டு போகும் அள­வுக்கு பிரம்­மாண்­ட­மான அரங்­கம் அமைத்து பாலி­வுட் நடிகை ஊர்­வசி ரவுத்­தே­லா­வுடன்

தான் நடிக்­கும் காதல்

காட்­சி­களைப் பட­மாக்­கு­மாறு ஜேடி ஜெர்­ரிக்கு கட்­ட­ளை போட்­டுள்­ளார் அண்­ணாச்சி.

கோலிவுட்டே பொறாமையில், "காசு இருந்தால் எதுவேண்டும் என்றாலும் செய்யலாம்," என்று முணுமுணுப்பதாகக் கூறப்படுகிறது.