நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் மார்ச் 26ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெற இருப்பதால், படத்தின் வெளியீட்டை நோன்புப் பெருநாளுக்கு மாற்றி வைத்தனர்.
ஆனால் அதே நாளில் தற்பொழுது 'அரண்மனை-3' படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார் சுந்தர்.சி. அதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் பெரிய திரையரங்குகளைக் கைப்பற்றும் வேலைகளில் இறங்கியுள்ளனர். போட்டி யில்லாமல் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', 'அரண்மனை-3' உடன் மோதப்போகிறது.

