உலகத் தமிழ்த் திரைப்பட விழாவில் 'அசுரன்'

உலகத் தமிழ்த் திரைப்பட விழாவில் 'அசுரன்'

2 mins read
6abdbea4-5421-4359-99fc-9e424e731e80
'அசுரன்' படத்தின் ஒரு காட்சியில் தனுஷ், மஞ்சு வாரியர். -

தனுஷ் நடித்த படங்­களில் அதிக வசூல் கண்ட பட­மாக சாதனை படைத்­துள்­ளது 'அசு­ரன்'. இது தெலுங்­கில் 'நாரப்பா' என்ற பெயரில் மறு­ப­திப்­பா­கிறது.

வெற்­றி­மா­றன் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்தை விமர்­ச­கர்­களும் திரை­யு­ல­கத்­தி­ன­ரும் வெகு­வா­கப் பாராட்டி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் ஜப்­பா­னில் நடை­பெ­றும் ஒசாகா அனைத்­து­லக தமிழ்த் திரைப்­பட விழா­வில் 'அசு­ரன்' படத்­தைத் திரை­யிட உள்­ள­னர். சிறந்த தமிழ்ப்­பட விரு­துக்கு இப்­ப­டம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் 27, 28ஆம் தேதிகளில் இந்­தத் திரைப்­பட விழா நடை­பெற உள்­ளது.

இத­னால் தனுஷ் ரசி­கர்­கள் மகிழ்ச்சி அடைந்­துள்ள நிலை­யில் நடி­கர் சூர்­யா­வின் ரசி­கர்­களோ சோகத்­தில் உள்­ள­னர்.

'சூர­ரைப் போற்று' படம் ஆஸ்­கார் விரு­துக்­கான இறு­திச்­சுற்­றுக்கு தேர்­வா­க­வில்லை என்­பதே இதற்­குக் கார­ணம்.

சுதா கொங்­கரா இயக்­கத்­தில் வெளி­யான இப்­ப­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்­பைப் பெற்­றது. இந்­நி­லை­யில் ஆஸ்­கார் விரு­துக்­கான பொதுப் பிரி­வில் போட்­டி­யிட இப்­ப­டம் தேர்­வா­னது.

மொத்­தம் 366 படங்­களில் 'சூரரைப் போற்று' பட­மும் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக ஜன­வரி மாதம் அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் விரு­துப் போட்­டிக்­குத் தேர்­வான படங்­க­ளின் இறு­திப் பட்­டி­யல் தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் 'சூர­ரைப் போற்று' இடம்­பெ­ற­வில்லை.

இத­னால் வருத்­த­ம­டைந்த போதி­லும், 'சூர­ரைப் போற்று' தர­மான படைப்பு என்­ப­தில் எந்­த­வித சந்­தே­க­மும் இல்லை என சூர்­யா­வின் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே தனது அடுத்­த­டுத்த படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சூர்யா.

புதிய கதைக்­க­ளத்­தில் நடிப்­ப­தால் உடல் எடை­யைக் குறைப்­ப­தற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளா­ராம். இதற்­காக அவர் கடு­மை­யாக உடற்­ப­யிற்சி செய்து வரு­வ­தா­கத் தக­வல்.