'சுல்தான்' படத்தின் வெளியீட்டுத் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் தயாரிப்பு நிறுவனமான 'டிரீம் வாரியர்ஸ்' தெரிவித்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக அந்த வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 'சுல்தான்' பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படும் என தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்துள்ள தயாரிப்புத் தரப்பு குறித்த தேதியில் படம் வெளியாகும் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
'சுல்தான்' வெளியீட்டு தேதியில் மாற்றமில்லை
1 mins read
-

