அனுஷ்காபோல ராணியாக, நிறைய நகைகளை அணிந்து நடிக்கவேண்டும் என்ற ஆசை தற்பொழுது நிறைவேறி இருப்பதாக சமந்தா மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.
மகாகவி காளிதாஸ் எழுதிய
'சாகுந்தலம்' காவியத்தை தெலுங்கில் படமாக எடுக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார்.
சகுந்தலையாக சமந்தாவும் அவரது காதலன் துஷ்யந்தனாக மலையாள இளம் நடிகர் தேவ் மோகனும் நடிக்கிறார்கள். அண்மையில் இதன் படப்பிடிப்பு
ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது.
விசுவாமித்திர முனிவருக்கும்
மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை. இவர் மன்னர் துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். ஒரு
கட்டத்தில் அவரைப் பிரிகிறார் துஷ்யந்தன்.
முனிவர் சாபத்தால், துஷ்யந்தன் சகுந்தலையை மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு
துன்பங்களைக் கடந்து
கணவருடன் சகுந்தலை
எப்படி இணை
கிறார் என்பதுதான் கதை.
இந்தக் கதையை
மையமாக வைத்துதான் 'சாகுந்தலம்' படம் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சமந்தா, செய்தியாளர்களிடம் பேசியபோது, "இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். வணிக ரீதியான படம் முதல் மர்மம் நிறைந்த படம் வரை குணச்சித்திரம், வில்லி, சண்டைக்காரி என பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
இதுபோன்ற படங்களில் நடிப்பது எனக்கு எளிதாக இருந்தது. காரணம் அதற்கு அவ்வளவாக கஷ்டப்பட்டு நடிக்கத் தேவையில்லை.
"ஆனால்
'சாகுந்தலை' படம் அப்படி அல்ல. இளவரசியாக நடிக்கப் போகிறேன் என்ற பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை மறுபுறம் இருக்கிறது.
"இதுபோன்ற சரித்திரப் படத்திற்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன். அது இப்போது நிறைவேறி இருக்கிறது. நிறைய நகைகள் அணிந்து, பளபள உடைகள் அணிந்து சரித்திர படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இந்தப் படத்தில் நிறைவேறி இருக்கிறது.
"பிரம்மாண்ட அரங்குகளில் பெரும் பொருட்செலவில் தயாராகும் 'சாகுந்தலம்' படத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்திற்காக நான் 100 விழுக்காடு என்னுடைய உழைப்பைக் கொடுப்பேன்," என்றார் சமந்தா. இந்தப் படத்தின் இயக்குநர்
ஏற்கெனவே, அனுஷ்கா நாயகியாக நடித்து, 2015ல் வெளியான வரலாற்றுப் படமான 'ருத்ரமாதேவி' படத்தை இயக்கியவர்.
அந்தப் படத்தில் ராணா, அல்லு
அர்ஜுன் உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழிலும் இந்தப் படம் வெளியானது.
சமந்தா அண்மையில் மகா சிவராத்திரி விழாவின்போது கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குச் சென்று கண்
விழித்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு குறைவான பக்தர்களே இந்த மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், லட்சுமி மஞ்சு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதோடு சக நடிகைகளைத்
தன்னுடன் இணைத்துக்கொண்டு
உற்சாகமாக நடனமாடியிருக்கிறார் சமந்தா. மேலும், தனது சக தோழிகளுடன் ஆதியோகியின் சிலை முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் சமந்தா.
மேலும் இவர் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி திரையுலகில் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது.
இவர் நடிகைகளின் ஊதியம் நடிகர்
களைப்போல கிடையாது. படத்திற்குப் படம் நடிகர்களின் ஊதியம் கோடிக்கணக்கில் ஏறிக்கொண்டே போகிறது. ஆனால் நடிகைகளின் ஊதியம் மட்டும் அதே நிலையில் இருக்கிறது. ஊதியத்தை உயர்த்திக் கேட்டால் பிரச்சினையாக்கி விடுகிறார்கள். இதில் நியாயமே இல்லை. இதுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று நடிகைகளின் சார்பாக துணிச்சலாக தன்னுடைய கருத்தினை தெரிவித்து இருந்தார் சமந்தா.
நிறைய நகைகள், பளபளக்கும் உடைகள் அணிந்து ராணியாக நடிக்கிறார் சமந்தா

