விஷாலே இப்படிச் செய்யலாமா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர்

விஷாலே இப்படிச் செய்யலாமா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர்

1 mins read
c652489c-7867-44a5-a266-5eee17d57f99
-

விஷால் ஒரு நடிகராக, தயாரிப்பாளராக இருக்கிறார். இருந்தும் தயாரிப்பாளரின் கஷ்டம் புரியாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் நஷ்டம் ஏற்படுத்துகிறார் என்று கண்டனக் குரல் எழும்பியுள்ளது.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பிற்குச் சென்ற விஷால் முதல் நாள் மட்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

அதன்பிறகு மூன்று நாட்கள் அவரை வலைவீசித் தேடியும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமலும் திணறிப் போனார்கள் படக்குழுவினர்.

மூன்று நாட்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நடிகர் விஷால். அதுவரை அவருடைய காட்சிகளைப் படமெடுக்க முடியாமல் பலரும் துபாயில் வீணாகப் பொழுதைக் கழிக்க நேர்ந்தது.

இதைப்போலவே ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் முதல் நாள் கலந்துகொண்டுவிட்டு பிறகு சொல்லாமல் சில நாட்கள் காணாமல் போய்விட்டாராம்.

"விஷாலும் ஒரு தயாரிப்பாளர்தான். இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்தவர். அவரே இப்படி நடந்துகொண்டு தயாரிப்புத்துறைக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது நியாயம் இல்லை," என்று தயாரிப்புத் தரப்பு குறை கூறுகிறது.

விஷால் தயாரிப்பில் வெளிவந்த 'சக்ரா' படம் 25வது நாளைத் தொட்டாலும் அந்தப் படத்தால் விஷாலுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

அவர் நம்பியிருக்கும் ஒரே படமான 'எனிமி' படத்திற்கும் அவரே 'எனிமி' ஆகாமல் இருந்தால்தான் அவருக்கு நல்லது என்கிறது திரையுலக வட்டாரம்.