மும்பையில் வீடு ஒன்றை பல கோடிகளுக்கு வாங்கி குடியேறி இருக்கிறார் நடிகை டாப்சி.
மும்பையில் உள்ள ஒவ்வொரு சினிமா பிரபலத்திற்கும் சொந்தமாக வீடு வாங்குவதென்பது பெரும் கனவு. அதுவும் பிரபலமான இடத்தில் அடுக்குமாடி வீடு மட்டுமே கிடைக்கும். அந்த இடத்தில் தனி வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் டாப்சி.
இவர் தற்பொழுது தமிழில் இரண்டு படங்கள், இந்தியில் நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
"வீடு நண்பர்களை சந்திக்கும் இடம். அன்பை வளர்க்கும் இடம். புது வீட்டிற்குள் குடி
புகுந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்று குறிப்பிட்டு வீட்டின் படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராமில் பதிவிட்டு இருக்கிறார் டாப்சி.

