நகைச்சுவை நடிகர் புகழுக்கு குவியும் படங்கள்

நகைச்சுவை நடிகர் புகழுக்கு குவியும் படங்கள்

1 mins read
19c3a277-c5d5-4371-a292-f6610ab42298
-

'வருத்­தப்­ப­டாத வாலி­பர் சங்­கம்', 'ரஜினி முரு­கன்', 'சீம­ராஜா' படங்­களை இயக்­கிய பொன்­ராம் அடுத்ததாக விஜய் சேது­ப­தி­யின் 46வது படத்தை இயக்­கு­கி­றார். டி.இமான் இந்தப் படத்திற்கு இசை­அமைக்­கி­றார்.

இந்­தப் படம் குறித்த அதி­கா­ர­பூர்வ செய்­தி­களை இயக்­கு­நர் காணொ­ளி­யாக நேற்று முன்தினம் வெளி­யிட்டு இருந்தார்.

அந்­தக் காணொ­ளி­யில் "இந்­தப் படத்­தில் நாயகனாக விஜய் சேது­பதி நடிக்கிறார். அவரது 46வது படத்­தில் மீண்­டும்

போலிசாக நடிக்க இருக்­கி­றார். அவ­ரு­டன் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிர­ப­ல­மான நகைச்சுவை நடிகர் புக­ழும் முக்­கிய வேடத்­தில் நடிக்க இருக்­கி­றார்," என்று கூறியிருந்தார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பால் 'தல' அஜீத்­தின் 'வலிமை' படத்­தி­லும் அருண் விஜய் படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தி­லும் புகழ் நடித்து வரு­கி­றார்.

இதற்­கி­டை­யில் இவ­ரின் நகைச்­சு­வை­யால் கவ­ரப்­பட்ட நடி­கர் விஜய் தனது 65வது படத்­தில்

புக­ழுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்­

கி­றார்.

இந்தப் படத்தை, 'கோல­மாவு கோகிலா', 'டாக்­டர்' ஆகிய படங்­களை இயக்­கி­உள்ள நெல்­சன் திலீப்­கு­மார் இயக்க உள்­ளார் என­பது குறிப்­பி­டத்­தக்­கது.