கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள ஓர் அழகான காதல் படம் 'தேன்'. இந்தப் படத்தை இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.
'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'தகராறு' ஆகிய படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அபர்நதி தீத்யா இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அம்பலவாணன், பிரேமா இணைந்து படத்தைத் தயாரித்துள்ளனர்.
'தேன்' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 'ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் பெற்றுள்ளது. அதையடுத்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு ஒரு சிறப்பு சலுகையை 'ஏஜிஎஸ்' நிறுவனம் வழங்கியுள்ளது.
அதன்படி 'ஏஜிஎஸ்' திரையரங்குகளில் 'தேன்' படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு செல்லாத ரசிகர்களும் சென்று பார்க்க விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர்.

