அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள படம் 'டாணாக்காரன்'. வெற்றிமாறனிடம் 'வடசென்னை', 'விசாரணை', 'அசுரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் தமிழ். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்து இருக்கிறார். லால் வில்லனாக வருகிறார். போஸ் வெங்கட், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்து இருக்கிறார். "தமிழ்நாட்டில் 1997இல் நடந்த உண்மைச் சம்பவத்தைக் கருவாகக் கொண்ட படம் இது. காவல்துறை பணியில் விருப்பம் கொண்ட இளைஞன் ஒருவன் அதற்கான பயிற்சியின்போது நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இது இந்திய சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதை," என்கிறார் இயக்குநர் தமிழ்.
உண்மைச் சம்பவத்தை கருவாகக் கொண்ட படம்
1 mins read
-

