ரம்யா: வயது ஒரு தடையாக உள்ளது

ரம்யா: வயது ஒரு தடையாக உள்ளது

2 mins read
156e614b-296e-4b50-835b-0909d0626c0c
ரம்யா நம்பீசன் -

சினி­மா­வில் நடி­கை­கள் நீண்ட காலம் நிலைத்­தி­ருப்­பது சவா­லான விஷ­யம் என்­கி­றார் ரம்யா நம்­பீ­சன்.

தற்­போது அவர் நடித்து வரும் 'என்­றா­வது ஒரு­நாள்' என்ற தலைப்­பி­லான படம் தம்­மைத் திரை­யு­ல­கப் பய­ணத்­தின் அடுத்த கட்­டத்­துக்­குக் கொண்டு செல்­லும் என நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார். பத்ரி வெங்­க­டேஷ் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் படம் இது.

"நான் நடிக்க வந்து 20 ஆண்­டு­க­ளாகி விட்­டன. 2000ஆவது ஆண்­டில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக மலை­யா­ளப் படத்­தில் அறி­மு­க­மா­னேன். அதன் பிறகு எனது திரைப்­ப­ய­ணத்­தில் பல்­வேறு நெளிவு சுளி­வு­களை முக்­கி­ய­மான விஷ­யங்­க­ளைப் புரிந்துகொண்­டுள்­ளேன். அத­னால் ஒரு படத்­தின் நிறை­கு­றை­கள் அனைத்­தும் எனக்கு நன்கு புரி­யும்.

"வயது என்­பது நடி­கர்­க­ளை­விட நடி­கை­க­ளைத்­தான் அதி­கம் பாதிக்­கும். ஆனால், இன்­றைய கால­கட்­டத்­தில் அதில் மெல்ல பல்­வேறு மாற்­றங்­கள் ஏற்­பட்டு வரு­கின்­றன. வயது எனும் தடைக்­கல்லை நிறைய நாய­கி­கள் உடைத்து முன்­னேறி வரு­கி­றார்­கள்," என்­கி­றார் ரம்யா நம்­பீ­சன்.

சினி­மா­வில் நடிப்­பது மட்­டு­மல்­லா­மல் வாய்ப்பு கிடைத்­தால் நல்ல பாடல்­க­ளை­யும் பாடி வரும் இவ­ருக்கு ஒரே மாதி­ரி­யான வேடங்­களை ஏற்று நடிப்­ப­தில் விருப்­ப­மில்லை. அதே­ச­ம­யம் அவ்­வப்­போது சில படங்­களில் கௌரவ வேடங்­களில் தோன்­று­கி­றார்.

"ஏன் சிறிய வேடங்­களில் நடிக்­கி­றீர்­கள் என்­ப­து­தானே உங்­கள் கேள்வி? எனது திரை­யு­லக நண்­பர்­க­ளுக்­காக அவ்­வாறு நடிக்க வேண்­டி­யுள்­ளது. அதே­ச­ம­யம் கௌரவ வேடம் என்­றா­லும் படத்­துக்­குப் படம் வித்­தி­யா­ச­மாக இருக்­கு­மாறு பார்த்­துக்கொள்­கி­றேன்.

"என் கதா­பாத்­தி­ரத்­தின் நீளம் எனக்­குப் பெரி­தல்ல. அதில் நடிப்­ப­தன் மூலம் கிடைக்­கும் அனு­ப­வம்­தான் முக்­கி­யம் எனக் கரு­து­கி­றேன்," என்று சொல்­லும் ரம்யா நம்­பீ­சன், திரு­ம­ணம் குறித்து தாம் இன்­னும் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை என்­கி­றார். வய­தைப் போலவே திரு­ம­ணம் என்­ப­தும் நடி­கை­யின் முன்­னேற்­றத்­தைத் தடுப்­ப­தா­கக் கரு­து­கி­றா­ராம்.

"எனக்கு வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களை அளித்­துள்ள இயக்­கு­நர்­க­ளுக்கு என்­றும் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளேன். அவற்­றால்­தான் ரசி­கர்­கள் என்னை நினை­வில் வைத்­தி­ருந்து ஆத­ரவு தரு­கி­றார்­கள். திரு­ம­ணம் குறித்து இன்­னும் யோசிக்­கவே இல்லை.

"பொதுவாக திருமணம் நடிகைகளுக்கு ஒரு தடையாகவே உள்ளது. இந்தத் தடை நீங்க வேண்டும். எனக்கு நெருக்கமான ஒரு தோழி நன்றாக நடிப்பார். சில மாதங்களுக்கு முன்பு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், திடீரென திருமணம் செய்து கொண்டதால் இந்த வாய்ப்பு அவரிடமிருந்து பறிபோய்விட்டது," என்கிறார் ரம்யா.