திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
1348a314-bee2-4a11-a125-2719c40e4075
-
multi-img1 of 2

மீண்டும் காதல் வலையில் ஷ்ருதி

நடிகை ஷ்ருதிஹாசன் கடந்த ஆண்டைவிட இப்போது உற்சாகமாக வலம் வருகிறார்.

அடுத்து நாயகியை மையப்படுத்தி உருவாகும் புதுப்படத்தில் இவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது 'பாகுபலி' பிரபாசுடன் 'சலார்' படத்தில் நடித்து வருபவர், தமிழில் 'லாபம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்காக டி.இமான் இசையில் இவர் பாடியுள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் ரவிதேஜாவுடன் இவர் இணைந்து நடித்த 'கிராக்' படம் அண்மையில் வெளியீடு கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு பவன் கல்யாண் ஜோடியாக 'வக்கீல் சாப்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே சாந்தனு ஹசாரிகா என்பவரை ஷ்ருதி காதலிப்பதாகவும் இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

'என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்'

அண்மையில் காலமான இயக்குநர் ஜனநாதன் விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் 'லாபம்' படத்தை இயக்கியிருந்தார்.

அப்படத்தின் இறுதிக்கட்டப் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான் அவர் திடீரென உயிரிழந்தார்.

முன்னதாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்குரிய செலவுகள் அனைத்தையும் விஜய் சேதுபதிதான் ஏற்றுக்கொண்டார் என்பது இப்பொழுது தெரிய வந்துள்ளது. "கோடி ரூபாய் செலவாகி இருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். என் அபிமான இயக்குநரை இழந்ததுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்," என்று நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம் சேதுபதி.