அட்லி தற்போது ரூ.35 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.
சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர், 'ராஜா ராணி' மூலம் தனி இயக்குநராக உயர்ந்தார். முதல் படத்துக்கு சில லட்சங்களில் சம்பளம் பெற்ற அவர், 'தெறி'க்காக ஒரு கோடியும் 'மெர்சல்' படத்துக்காக பத்து கோடியும் வாங்கினாராம். இந்நிலையில் இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்துக்காக அட்லிக்கு 35 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகத் தகவல்.

