டோலிவுட்டில் கல்லா கட்டும் கண்ணழகி

டோலிவுட்டில் கல்லா கட்டும் கண்ணழகி

2 mins read
1d2f45f1-3587-4235-90e8-b9c5248bf4ad
-

நடிப்பு, கவர்ச்சி, நட­னம் என அனைத்­தி­லும் அசத்­தும் கண்­ண­ழகி என்று அழைக்­கப்­படும் அனு இமா­னு­வே­லுக்கு தற்­பொ­ழுது தெலுங்­குத் திரை­யில் எக்­கச்­சக்­க­மான வாய்ப்­பு­கள் குவிந்து வரு­கின்­றன. இவர் தற்­பொ­ழுது மிகப் பிரம்­மாண்­ட­மாக தெலுங்­கில் உரு­வா­கும் படத்­தில் முதன்­மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து வரு­கி­றார்.

சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'நம்ம வீட்­டுப் பிள்ளை' படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடித்திருந்­த­வர் நடிகை அனு இமா­னு­வேல். இப்­பொ­ழுது ரசி­கர்­க­ளின் கனவு கன்­னி­யாக உள்ளார். விரைவில் முன்­னணி நடி­கை­யாக இருக்­கும் அனு இமா­னு­வேல் தெலுங்­கில் 'மஹா சமுத்­ரம்' என்ற திரைப்­ப­டத்­தில் நடித்து வரு­கி­றார்.

இந்­தப் படத்­தில் இவ­ரு­டன் அதிதி ராவும் மற்­றொரு கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார். மேலும் படத்­தில் இரண்டு நாய­கர்களாக சித்­தார்த்­தும் சர்­வா­னந்த்­தும் நடிக்­கின்­ற­னர். இந்­தப் படத்தை பெரும் பொருட்­செ­ல­வில் தெலுங்கு இயக்­கு­நர் அஜய் பூபதி இயக்க உள்­ளார்.

தமிழ் சினி­மா­வில் அனல் காற்­றாக வீசி வரும் நடிகை அனு இமா­னு­வேல் 'துப்­ப­றி­வா­ளன்' படம் மூலம் தமி­ழுக்கு அறி­மு­க­மா­னார். அதன் பிறகு தன்­னு­டைய காந்­தக் கண்­ணால் 'நம்ம வீட்­டுப் பிள்ளை' படத்­தில் சிவா­வு­டன் இணைந்து கலக்­கி­னார். 'நம்ம வீட்­டுப் பிள்ளை' மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்று குடும்­பங்­கள் கொண்­டா­டும் மிகச் சிறந்த திரைப்­ப­ட­மாக வெளி­யாகி கல்லா கட்­டி­யது.

துரு­து­ரு­வென்ற நடிப்­பிற்கு மட்­டு­மல்­லா­மல் அனல் வீசும் சூடான கவர்ச்­சிக்­கும் எந்த ஒரு குறை­யும் வைக்­கா­மல் ரசி­கர்­களை திரைப்­ப­டங்­க­ளி­லும் சமூக வலை­த்த­ளங்­க­ளி­லும் குளிர்­வித்து வரு­கி­றார் இவர்.

இவ­ருக்கு தெலுங்கு சினி­மா­வில் அதிக வர­வேற்பு இருப்­ப­தால் அங்கு இவரை, இயக்­கு­நர்­கள், தயா­ரிப்­பா­ளர்­கள் என அனைவரும் தங்­க­ளது திரைப்­

ப­டங்­களில் ஒப்­பந்­தம் செய்ய வரி­சை­யில் நிற்­கின்­ற­னர்.

இனி தமி­ழில் நடித்­தால் முன்­னணி நடி­க­ரின் திரைப்­ப­டத்­தில்­தான் நடிக்க வேண்­டும் என்று தீர்­மா­ன­மாக உள்ள அனு இமா­னு­வேல் அதற்­கா­கவே தாறு­மா­றான கவர்ச்சி புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்டு கவர்ச்­சிப் புய­லாக மாறி உள்­ளார்.

வரிக்­கு­திரை வண்ணத்தில் சன்னல் ஓரமாக காற்று வாங்கிக்கொண்டு கவர்ச்சியான கண்ணால் சிரித்துக்கொண்டு அமர்ந்து இருக்கும் படத்தை வலத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் அனு.