தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மணிமகுடமாக 'லாபம்' படம் இருக்கும்'

2 mins read
c610f8d6-1c26-4cf8-868d-ee299c22dcf5
-

அண்­மை­யில் இறந்த இயக்­கு­நர் எஸ்.பி.ஜன­நா­த­னுக்கு மணி­ம­கு­ட­மாக 'லாபம்' படம் இருக்­கும் என்­ப­தில் சந்­தே­கமே இல்லை என்று படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

விஜய் சேது­பதி எஸ்.பி.ஜன­நா­தன் கூட்­ட­ணி­யில் உரு­வா­கி­யுள்ள படம் 'லாபம்'. இந்த படத்­தில் விஜய் சேது­ப­திக்கு ஜோடி­யாக ஷ்ரு­தி­ஹா­சன் நடித்­துள்­ளார்.

இதில் ஜெக­ப­தி­பாபு, கலை­ய­ர­சன் ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ளனர். டி இமான் இப்­ப­டத்­திற்கு இசை­ய­மைத்­துள்­ளார்.

"இந்த படத்­தின் முன்­னோட்­டக் காட்சி கடந்த மாதம் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்­பு­கள் முடிந்து பின்­னணி வேலை­கள் நடை­பெற்று வந்­தன. தொடர்ந்து படத்­தின் எடிட்­டிங் பணி­களைக் கவ­னித்து வந்­த­போது இயக்­கு­நர் எஸ்.பி.ஜன­நா­தன் உடல் நலக்­

கு­றைவு கார­ண­மாக கால­மா­னார்.

"இந்­நி­லை­யில் படத்­தின் தயா­ரிப்பு நிறு­வ­னம் சார்­பில் அறிக்கை ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது. அதில், இந்­தத் தரு­ணத்­தில் எங்­கள் இயக்­கு­நர் எஸ்.பி.ஜன­நா­த­னின் மறைவு மிகுந்த வருத்­த­மும் வேத­னை­யும் அளிக்­கிறது.

"இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும் ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது.

"அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை.

"அதே­ச­ம­யம் எங்­கள் இயக்­கு­நர் எஸ்.பி.ஜன­நா­தன் 'லாபம்' படத்­தின் அனைத்­துப் பணி­க­ளை­யும் முழு­மை­யாக முடித்­துக் கொடுத்­து­விட்­டார். எஞ்­சி­யி­ருக்­கும் சில பணி­களை எங்­கள் படக்­கு­ழு­வி­னரே முடித்து வெளி­யி­ட­வுள்­ளோம்.

"அனைத்து பணி­

க­ளை­யும் முடித்து ஏற்­கெ­னவே திட்­ட­மிட்­ட­படி வரு­கிற ஏப்­ரல் மாதம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழி­களில் பிரம்­மாண்­ட­மாக வெளி­யா­க­வுள்­ளது என்­பதை தெரி­வித்­துக்கொள்­கி­றோம்.

"எங்­கள் இயக்­கு­நர் எஸ்.பி.ஜன­நா­த­னுக்கு மணி­ம­கு­ட­மா­க­வும் அவ­ரின் ரசி­கர்­க­ளுக்­கான திரைப்­ப­ட­மாகவும் 'லாபம்' இருக்­கும் என்­ப­தில் சந்­தே­கமே இல்லை," என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மறைந்த இயக்குநருக்குப் புகழாரம் சூட்டியது படக்குழு