நடிகை கீர்த்தி சுரேஷ் 'ராங் தே' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தில் நடிகர் நிதின் கதாநாயகனாக நடித்துள்ளார். படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
அதனால் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கீர்த்தி சுரேஷும் நிதினும் தீவிரமாக வேலை செய்து வந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் அடிக்கடி கிண்டல் செய்து பதிவிட்டு வந்தனர்.
அப்படி அவர்கள் பதிவிடும் பதிவுகள் மக்களிடையே பகிரப்பட்டு வந்தது.
அண்மையில் நிதின், கீர்த்தி
சுரேஷின் இளமைக்கால புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "இவரைக் காணவில்லை. அன்புள்ள அனு, நீ எங்கு இருக்கிறாய்? 'ராங் தே' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வா. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்," என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஹைதராபாத் காவல்துறை, "கவலைப்படாதீர்கள் நிதின். நாங்கள் இருக்கிறோம். உங்கள் கீர்த்தியைக் கண்டுபிடித்துத் தருகிறோம்," என்று வேடிக்கையாகப் பதிலளித்துள்ளது.
இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

