'கர்ணன்' பாடலால் சர்ச்சை

'கர்ணன்' பாடலால் சர்ச்சை

3 mins read
0ace0758-cfba-4ae1-a2cb-bd147f455d99
-

அண்­மைக் காலங்­களில் முன்­னணி நடி­கர்­கள் நடிக்­கும் படங்­கள் தொடர்­பாக ஏதே­னும் சர்ச்சை வெடிக்­க­வில்லை என்­றால்­தான் ஆச்­ச­ரி­யப்­பட வேண்டி உள்­ளது. ஒரு­வ­கை­யில் இத்­த­கைய சர்ச்­சை­க­ளும்­கூட அப்­ப­டங்­க­ளுக்கு இல­வச விளம்­ப­ரம்­போல் அமைந்து­வி­டு­கின்­றன.

இந்­நி­லை­யில், தனுஷ் நாய­க­னாக நடிக்­கும் 'கர்­ணன்' படம் குறித்­தும் ஒரு சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது. மாரி செல்­வ­ராஜ் இயக்­கத்­தில் உரு­வா­கி­யுள்ள இந்­தப் படத்­தில் இடம்­பெற்­றுள்ள பாடல்­தான் பிரச்­சி­னைக்­குக் கார­ணம்.

குறிப்­பிட்ட ஒரு சாதியை இழி­வு­ப­டுத்­தும் வகை­யில் அந்­தப் பாடல் அமைந்­துள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் புகார் எழுப்பி உள்­ள­னர். இது­தொ­டர்­பாக நீதி­மன்­றத்­தி­லும் வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­னைக்­கும் சாதி ரீதி­யாக மக்­கள் ஒடுக்­கப்­படு­வ­தை­யும் இழி­வு­ப­டுத்­தப்­ப­டு­வ­தை­யும் தனது அறி­மு­கப் பட­மான 'பரி­யே­றும் பெரு­மா­ளில்' வலி­யோடு சொன்­ன­வர், இயக்­கு­நர் மாரி செல்­வ­ராஜ். அப்­ப­டிப்­பட்­ட­வர் மீது­தான் சாதியை இழி­வு­ப­டுத்­தி­ய­தாக ஒரு­தரப்பு பாய்ந்­துள்­ளது.

எதிர்­வ­ரும் ஏப்­ரல் மாதம் திரை­காண உள்­ளது 'கர்­ணன்'. தனுஷ் ரசி­கர்­கள் மத்­தி­யில் இப்­ப­டம் குறித்த எதிர்­பார்ப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில், படத்­துக்­குத் தடை விதிக்­கக் கோரி நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ளார் மது­ரை­யைச் சேர்ந்த புல்­லட் பிரபு என்­ப­வர்.

இது­தொ­டர்­பாக அவர் தாக்­கல் செய்­துள்ள பொது­நல மனு­வில் 'கர்­ணன்' படப் பாடல் பண்­டா­ரம் சமூ­கத்தை இழி­வு­ப­டுத்­தும் வகை­யில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

எனவே குறிப்­பிட்ட பாட­லில் இடம்­பெற்­றுள்ள 'பண்­டா­ரத்தி-சக்­கா­ளத்தி' எனும் வார்த்­தை­களை உள்­ள­டக்­கிய வரி­களை நீக்­க­வேண்­டும் என்­பதே அவ­ரது கோரிக்­கை­யாக உள்­ளது. மேலும், பட­வெ­ளி­யீட்­டுக்கு இடைக்­கா­லத் தடை விதிக்கவேண்­டும், சமூக வலைத்­த­ளங்­களில் இடம்­பெற்­றுள்ள அப்­பா­ட­லை­யும் அது­தொ­டர்­பான பதி­வு­க­ளை­யும் நீக்க உத்­த­ர­விட வேண்­டும் என­வும் பிரபு அம்­ம­னு­வில் கோரி­யுள்­ளார்.

இப்­பா­டல் தமி­ழ­கம் முழு­வ­தும் வசிக்­கும் பண்­டா­ரம், ஆண்­டிப்­பண்­டா­ரம், ஜங்­கம், யோகிஸ்­வ­ரர் ஆகிய சமு­தாய மக்­க­ளின் மதிப்பைக் கெடுக்­கும் வகை­யில் உள்­ளது என அவர் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

'கர்­ணன்' படக்­கு­ழு­வி­னரோ குறிப்­பிட்ட பாடல் இடம்­பெற்­ற­தற்கு எந்­த­வொரு தனிப்­பட்ட கார­ண­மும் இல்லை என்­கிறது. மேலும், பண்­டா­ரம் என்­பது பொது­வான பெயர்­தான் என்­றும் எந்த சாதி­யை­யும் இழி­வு­ப­டுத்­தும் நோக்­கத்­தில் அவ்வார்த்தை பயன்படுத்தப்­ப­ட­வில்லை என்­றும் விளக்­கம் தரப்­பட்­டுள்­ளது.

ஆனால் இதை ஏற்­காத பண்­டா­ரம் சமூ­கத்­தி­ன­ரின் வீர­சே­வைப் பேர­வை­யி­னர் 'கர்­ணன்' படத்­துக்கு எதி­ரா­கப் போராட்­டம் நடத்த இருப்­ப­தாக தெரி­விக்­கின்­ற­னர்.

வழக்கு தொடுத்­துள்ள புல்­லட் பிர­பு­வின் வழக்­க­றி­ஞரோ, "மற்ற சமூ­கப் பெயர்­க­ளால் அந்­தந்த சமூ­கப் பெண்­க­ளைக் குறிப்­பி­டும் வார்த்­தை­களைச் சினி­மா­வில் இவ்­வாறு பயன்­ப­டுத்­து­வார்­களா? பண்­டா­ரத்­தியை மட்­டும் எப்­ப­டிக் குறிப்­பி­ட­லாம்," எனக் கேள்­வி­கள் எழுப்­பு­கி­றார்.

தமிழ் சினி­மா­வில் ஒரு குறிப்­பிட்ட சமூ­கப் பெண்­களை இழி­வு­ப­டுத்தி பாடல் எழு­து­வதை அனு­ம­திக்க இய­லாது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், தாங்­கள் சுட்­டிக்­காட்­டும் பாடல்­வ­ரி­களை நீக்­கும் வரை போராட்­டம் நீடிக்­கும் என்­கி­றார்.

"சமூக ஒடுக்­கு­மு­றை­கள் குறித்­துப் பல பாடல்­கள் எழு­தி­யுள்ள கவி­ஞர் யுக­பா­ரதி இப்­போது ஏன் இப்­படி எழு­தி­யுள்­ளார்? எனத் தெரி­ய­வில்லை. ஒரு­வேளை அவ­ருக்கு தென்­மா­வட்ட சமூ­கங்­கள் குறித்து அதிக விவ­ரங்­கள் தெரி­ய­வில்­லையோ என்று நினைக்­கத் தோன்­று­கிறது.

"பண்­டா­ரத்தி என்று குறிப்­பி­டு­வது தவறு என்­பது இயக்­கு­நர் மாரி செல்­வ­ரா­ஜுக்­கும் தனு­சுக்­கும் தெரி­யாதா?

"மாரி செல்­வ­ராஜ் சாதி இழி­வு­களுக்கு எதி­ரா­கப் பேசி வரு­கி­றார். அதே­ச­ம­யம் தன் பேச்­சுக்கு முர­ணா­க­வும் எதி­ரா­க­வும் இப்­பா­ட­லைப் பயன்­ப­டுத்­து­கி­றார்," என்று கொந்­த­ளிக்­கி­றார் வழக்­க­றி­ஞர் விஷ்­ணு­வர்­தன்.

இது­கு­றித்து கவி­ஞர் யுக­பா­ரதி தரப்­பில் அளித்த விளக்­கத்­தில், 'கர்­ணன்' படத்­தின் தயா­ரிப்­பா­ளர், இயக்­கு­நர் மீது­தான் வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் உரிய பதிலை அளிப்­பார்­கள் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்த சர்ச்சை குறித்து இயக்­கு­நர் மாரி செல்­வ­ராஜ் தரப்­பி­ல் இ­ருந்து இது­வரை எந்த விளக்­க­மும் வர­வில்லை.

இந்­நி­லை­யில், சர்ச்சை கார­ண­மாக படத்­தின் வெளி­யீடு தள்ளிப் போய்­வி­டக்­கூ­டாது என்­பதே தனுஷ் ரசி­கர்­க­ளின் தவிப்­பாக உள்­ளது. அவரோ மவுனம் காத்து வருகிறார்.

, :   

தனுஷ்