'அந்தாதூன்' இந்திப் படத்தின் தமிழ் மறுபதிப்புக்கு 'அந்தகன்' என்று தலைப்பு வைத்துள்ள நிலையில், அதன் நாயகியாக பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்.
இதையடுத்து நாயகியாக நடிப்பது யார் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இந்நிலையில் பிரியா ஆனந்த் நடிப்பது உறுதியாகி உள்ளது.

