'என்றாவது ஒருநாள்' உண்மையான உணர்வுகளின் தொகுப்பு

'என்றாவது ஒருநாள்' உண்மையான உணர்வுகளின் தொகுப்பு

2 mins read
08aff635-797c-4680-9607-5f6812b0c6d1
'என்றாவது ஒருநாள்' படத்தில் ரம்யா நம்பீசன். -

வணி­கப் படங்­க­ளுக்கு மத்­தி­யில் சமூக அக்­க­றை­யு­டன் உரு­வாக்­கப்­படும் படங்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கோடம்­பாக்­கத்­தில் கணி­ச­மாக அதி­க­ரித்து வரு­கிறது.

அந்த வகை­யில் 'என்­றா­வது ஒரு­நாள்' தனி முத்­திரை பதிக்­கும் என்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் வெற்றி துரை­சாமி.

இதில் விதார்த், ரம்யா நம்­பீ­சன் இரு­வ­ரும் முக்­கி­ய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். வறு­மை­யில் வாழ்ந்­தா­லும் வாழ்க்கை மீதான பிடிப்பை இழக்­காத தம்­ப­தி­ய­ரின் கதை இது.

இரண்டு மாடு­களை தங்­கள் குழந்­தை­யைப் போல் பாச­மாக வளர்த்து வரு­கி­றார்­கள். வாழ்க்கை கொடுக்­கும் நெருக்­க­டி­யால் அவற்­றை­யும் விற்­க­ வேண்­டிய சூழல் உரு­வா­கிறது.

"நக­ரத்து வாழ்க்­கை­யில் அதி­க­பட்­ச­மாக நாய்­கள், பூனை­கள் மீது மட்­டுமே மனி­தர்­கள் பாசம் காட்டு­கி­றார்­கள். ஆனால், கிரா­மங்­களில் மாடு­க­ளுக்கு இருக்­கிற நேசிப்பு எல்­லாம் வேறு ரகம்.

"கூடி வாழ்­வ­தும் அரி­வா­ளைத் தூக்­கு­வ­தும் பிறகு கண்­ணீர் விட்டு கட்­டி­ய­ணைத்து அழு­வ­தும்­தானே கிரா­மி­யக் கலா­சா­ரம்! விலங்­கு­கள் மீதான பாசம் இங்கு மனித உற­வு­க­ளுக்­குக் கொஞ்­ச­மும் குறைந்­த­தல்ல.

"இரு­த­ரப்­புக்­கும் இடையே பேச்சு­தான் இல்­லையே தவிர அத்­தனை உணர்ச்­சி­களும் இரு­த­ரப்­புக்­கும் புரி­யும். எனவே, இந்­தப் படம் ரச­னை­யும் தவிப்­பு­மாக ரசி­கர்­க­ளுக்கு காணக்­கி­டைக்­கும்.

"என்னைப் பொறுத்தவரை இத்­த­கைய பாச, நேசங்­க­ளை­யும் பெண்­ணின் மாண்­பு­க­ளை­யும் இன்­னும் சொல்­லித் தீர­வில்லை எனத் தோன்று­கிறது," என்­கி­றார் வெற்றி துரை­சாமி.

விதார்த்­தும் ரம்­யா­வும் மிக யதார்த்­த­மாக நடித்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், படம் பார்க்­கும் எவருமே இந்த இரு­வ­ரது நடிப்பை மட்­டும் தனியே குறிப்­பி­டா­மல் ஒட்டு­மொத்த பட­மும் அருமை என்­று­தான் சொல்­வார்­கள் என்­கி­றார்.

"கார­ணம், அனை­வ­ரது உழைப்­பும் அப்­படி அமைந்­துள்­ளது. இந்­தப் படத்­தின் ஆழத்­தில் இருக்­கும் ஒரு­வித அமைதி ரசி­கர்­களைப் படம் முழு­வ­தும் ஒரு­வி­தத்­தில் தொந்­த­ரவு செய்­து­கொண்டே இருக்­கும்.

"ரம்யா நம்­பீ­சனை ஒரு கிரா­மத்­துப் பெண்­ணாக ரசி­கர்­கள் பார்த்­தி­ருக்க வாய்ப்­பில்லை. என் மன­தில் இருந்த நாயகிக்கான சித்­தி­ரம் போலவே அச்சு அசலாக அமைந்­து­விட்­டார்.

"என்.ஆர். ரகு­நந்­தன் இசை­யமைத்­துள்­ளார். படத்­தைப் பார்த்த பிற­கு­தான் கவி­ஞர் வைர­முத்து 4 பாடல்­களை எழு­திக் கொடுத்­தார். 'வீடு இல்­லா­மல் இருப்­ப­துண்டு மனித சாதி, ஆனால் மாடு இல்­லா­மல் இருப்­ப­தில்லை உழ­வர் சாதி' என்ற பாடல் மனதை உருக்­கும்.

"மற்ற மூன்று பாடல்­களும் படத்­தின் உயி­ரோட்­ட­மாக இருக்­கும். ஒளிப்­ப­தி­வா­ளர் சண்­முகசுந்­த­ரம் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி உள்­ளார்," என்­கி­றார் வெற்றி துரை­சாமி.

இயக்­கு­நர் வெற்­றி­மா­றன்­தான் இவ­ரது மான­சீக குரு­வாம். அண்­மை­யில் இப்­ப­டத்­தைப் பார்த்த அவர், பல காட்­சி­கள் மனதை நெகி­ழச் செய்­வ­தா­கப் பாராட்­டி­னா­ராம். இந்தப் பாராட்டு வெற்றியை உற்சாகப்படுத்தி உள்ளது.

"இது நிச்­ச­யம் சரா­ச­ரி­யான பட­மாக இருக்­காது. இது உண்­மை­யான உணர்­வு­க­ளின் தொகுப்பு," என்­கி­றார் வெற்றி துரை­சாமி.