'எடை குறைப்பது சவாலாக இருந்தது'

'எடை குறைப்பது சவாலாக இருந்தது'

2 mins read
5339054e-a234-4679-8282-00029e445f9e
கங்கனா ரணாவத் -

சிறந்த நடி­கைக்­கான தேசிய விருது பெற்­றுள்­ளார் கங்­கனா ரணா­வத். இதை­ய­டுத்து அவ­ருக்கு வாழ்த்­து­கள் குவிந்து வரு­கின்­றன.

"இந்­திய சினி­மா­வில் தன்­னை­விட சிறந்த நடிகை இல்லை என தாம் நம்­பு­வ­தாக அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார் கங்­கனா. இதற்­காக கடும் விமர்­ச­னங்­களை அவர் திரை­யு­ல­கத்­தி­ன­ரி­டம் இருந்தே எதிர்­கொண்­டார்.

இந்­நி­லை­யில் 'மணிகர்னிகா' படத்­தில் நடித்­த­தற்­காக அவர் சிறந்த நடி­கை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே காலஞ்­சென்ற முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நடித்­தது தமக்கு சவா­லாக இருந்­த­தாக கங்­கனா கூறி­யுள்­ளார்.

"ஜெய­ல­லிதா குறித்து நிறைய விஷ­யங்­களைத் தெரிந்­து­கொண்ட பிறகே அவ­ரது கதா­பாத்­தி­ரத்­தில் என்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­தது. 'தலைவி' படத்­தில் நடித்­த­போது நான் எதிர்­கொண்ட முக்­கி­ய­மான சவால் என்­றால் அது என் உடல் எடையை அதி­க­ரிப்­ப­து­தான்.

"ஜெய­ல­லி­தா­வின் பிற்­பாதி வாழ்க்கை சம்­பந்­த­மான காட்­சி­களில் நடிப்­ப­தற்­காக என் உடல் எடையை அதி­க­ரிக்க வேண்­டும் என இயக்­கு­நர் கேட்­டுக்கொண்­டார். அத­னால் சுமார் 20 கிலோ அள­வுக்கு எடையை அதி­க­ரித்­தேன்.

"எனி­னும் அடுத்த சில வாரங்­களில் உடல் எடை­யைக் குறைக்க வேண்­டும் என்று என்­னி­டம் கூறப்­பட்­டது. அதற்­காக கடும் முயற்­சி­களை மேற்­கொண்­டேன்," என்று கங்­கனா ரணா­வத் தெரி­வித்­துள்­ளார்.

'தலைவி' படம் எதிர்­வ­ரும் ஏப்­ரல் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி­களில் வெளி­யாக உள்­ளது.

தமி­ழ­கத்­தில் சட்­டப்­பே­ர­வைத்தேர்­தல் நடந்துமுடிந்த கையோடு இப்­ப­டம் வெளி­யா­கிறது.

அர­சி­யல் ரீதி­யான காட்­சி­கள் இடம்­பெற்­றி­ருக்­கும் என்று கரு­தப்­ப­டு­வ­தால் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் இப்­ப­டத்­தின் வெளி­யீட்டை ஆவ­லு­டன் எதிர்­நோக்கி உள்­ள­னர்.