குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்று முன்தினம் காலமானார்.
உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
'ரேணிகுண்டா', 'பில்லா 2', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தீப்பெட்டி கணேசனுக்கு அண்மைக் காலமாக வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இதனால் சிறுதொழில்களில் ஈடுபட்ட அவர், பின்னர் மாத வருமானத்துக்கும் பணியாற்றினார். இந்நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
தமக்கு திரையுலகத்தினர் உதவி செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். பாடலாசிரியர் சிநேகன் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டினர். எனினும் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து அவர் உயிரிழந்தார்.

