ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார், மாதவி லதா, ஜி.காளையப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மதுரை மணிக்குறவன்'. ஜி.காளையப்பன் இப்படத்தை தயாரித்திருப்பதுடன் வில்லனாகவும் நடித்துள்ளார்.
மேலும் சுமன், பருத்திவீரன் சரவணன், ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி போன்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 45 நாட்களில் மொத்த காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.
"ரசிகர்களைக் கவரும் வணிக ரீதியிலான அம்சங்களுடன் சில நல்ல கருத்துகளையும் சொல்கிறோம். அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் ராஜரிஷி.
'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம்' போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமாருக்கு அதன் பின்னர் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இந்தப் புதுப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
"நல்ல கதை, திரைக்கதை அமைந்திருப்பதால் நம்பிக்கையுடன் நடித்துள்ளேன். இப்படம் வெளியான பிறகு மேலும் சில படைப்புகளில் என்னைக் காண முடியும்," என்கிறார் ஹரிக்குமார்.

