சர்ச்சையை ஏற்படுத்திய 'கர்ணன்' படப் பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ளது 'கர்ணன்' படம். இதில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் பண்டாரத்தி புராணம் என்ற வார்த்தைகள் அடங்கிய வரிகள் உள்ளன. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர்.
பட வெளியீட்டுக்கும் தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க படக்குழு முன்வந்துள்ளது. இதையடுத்து பட இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், 'கர்ணன்' திரைப்படத்தில் வரும் பண்டாரத்தி என்னும் கதாபாத்திரம் இனி 'மஞ்சனத்தி' என அழைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சொந்த அத்தையாக, அக்காவாக, ஆச்சியாக, பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் ரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிப்படுத்தினேன்.
"தேவதைகள் எந்தப் பெயரில் அழைக்கபட்டாலென்ன... பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிடப் போகிறதா என்ன?
"நம் சமூக அடுக்குமுறை அமைப்பில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலகமுடியாததாகவும் இருக்கிறது.
"இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தைப் பாடுவான், கர்ணன் ஆடுவான். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி," என்று மாரி செல்வராஜ் தனது பதிவில்தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தேசிய விருது கிடைத்தது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், "சிறந்த நடிகருக்கான விருதை வெல்வது ஒரு கனவு. அவ்விருதை இருமுறை வெல்வது ஆசீர்வாதத்திற்கு குறைவில்லாதது. 'சிவசாமி'யை எனக்குக் கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி. என் பெற்றோருக்கு நன்றி. என் குரு என் சகோதரர்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ்

