திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
ce477d40-77f4-4986-af1e-b636cbab1b1b
-
multi-img1 of 2

விமர்சனங்கள்: இலியானா வருத்தம்

உடல் தோற்றத்தை வைத்து நடிகைகளை விமர்சிப்பதை ஏற்க இயலாது என்கிறார் இலியானா.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தபோதே இந்தி பக்கம் சென்ற இவருக்கு, அங்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

மீண்டும் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமது தோற்றத்தை சிலர் சமூக வலைத்தளங்களில் கேலி செய்வது வருத்தம் அளிப்பதாக இலியானா கூறியுள்ளார்.

"முன்பு இடுப்பழகி என்று வர்ணித்தவர்களே இப்போது வேறு மாதிரியாக விமர்சிக்கிறார்கள். எனது தோற்றம் மாறி இருப்பது உண்மை. அதற்காக பொதுவெளியில் எனது தோற்றத்தை விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது," என்கிறார் இலியானா.

இந்நிலையில் தமிழில் தாம் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்றும் அவர் புலம்பிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

'வாய்ப்புகளை தட்டிப் பறிக்கவில்லை'

மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தமிழிலும் தெலுங்கிலும் மறுபதிப்பாகிறது.

தெலுங்கில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க, ராணா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ராணா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமான நிலையில், நாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் நடிக்க இயலாது என அவர் கைவிரிக்க, இப்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அவர் மீது சாய் பல்லவி வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நித்யா மேனன்.