இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'மதில்'. மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். மைம் கோபி, 'பிக்பாஸ்' புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். "இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் தேவையான கதை இது. நமது மதில் சுவர்களை கஷ்டப்பட்டு அலங்கரிக்கிறோம், தூய்மையாக வைத்திருக்கிறோம். ஆனால் வேறு யாரோ அதை பயன்படுத்துகின்றனர், சொந்தம் கொண்டாடுகின்றனர். இதைப் பற்றி படம் பேசுகிறது," என்கிறார் இயக்குநர் ஜவஹர். இப்படத்தை பக்கத்து தெருவில் அல்லது பக்கத்து வீட்டில் நடக்கும் தினசரி சம்பவங்களின் சுவாரசியமான தொகுப்பு என்றும் கூறலாம் என்கிறார். ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியீடு காண்கிறது.
அன்றாட நிகழ்வுகளின் சுவாரசியமான தொகுப்பு - 'மதில்'
1 mins read
-

