'இரண்டிலும் நடிப்பேன்'

'இரண்டிலும் நடிப்பேன்'

3 mins read
8455a229-7807-498c-a720-e53841bdbf6b
-

திரை­யு­ல­கில் அறி­மு­க­மாகி பத்து ஆண்­டு­கள் ஆகி­விட்­டதை நினைத்­தால் ஆச்­ச­ரி­ய­மாக இருக்­கிறது என்­கி­றார் சாந்­தினி தமி­ழ­ர­சன்.

பொது­வாக தொலைக்­காட்சி தொடர் நாய­கி­கள் திரை­யு­ல­கில் கால்­ப­தித்­து­விட்­டால் சின்­னத் திரையை மறந்­து­வி­டு­வார்­கள். ஆனால், அதற்கு நேர்­மா­றாக இரு­த­ளங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார் சாந்­தினி.

"பத்து ஆண்­டு­கள் திரை­ உ­ல­கில் தாக்­குப்­-பி­டிப்­பது பெரிய விஷ­யம்­தான். அதை நினைத்து மகிழ்­கி­றேன்.

"திறமை, அதிர்ஷ்­டம் ஆகி­ய­வற்­று­டன் எனக்­குக் கிடைத்த கதா­பாத்­தி­ரங்­களும் நல்­ல­வி­த­மாக அமைந்­தன.

"நான் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரங்­கள் மூல­மாக ரசி­கர்­களும் திரை­யு­ல­கி­ன­ரும் என்னை நினை­வில் வைத்­துள்­ள­னர். என் பய­ணம் சிறப்­பா­கத் தொடர இது­தான் கார­ணம் என நினைக்­கி­றேன்," என்று சொல்­லும் சாந்­தினி விஷு­வல் கம்­யூ­னி­கே­ஷன் படித்­துள்­ளார்.

படிப்பை முடித்த கையோடு சினி­மா­வில் பணி­யாற்ற வேண்­டும் என்­ப­து­தான் இவ­ரது கன­வாக இருந்­துள்­ளது.

எனி­னும் 12ஆம் வகுப்பு முடித்­தி­ருந்­த­போது 'மிஸ் சென்னை' அழ­கிப் போட்­டி­யில் பங்­கேற்­கும் வாய்ப்பு கிடைத்­த­தாம். அதன்­பி­ற­கு­தான் நிறைய பட­வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"பாக்­ய­ராஜ் சார் இயக்­கத்­தில் 'சித்து +2' படத்­தில் அறி­மு­க­மா­னேன். உண்­மை­யில் சொல்­வ­தா­னால் அப்­போ­தெல்­லாம் நடிப்­பின் மீது எனக்கு அதிக ஆர்­வம் இருந்­த­தில்லை.

"பாக்­ய­ராஜ் சார் சொன்­னதை அப்­ப­டியே செய்­தேன். எனி­னும் இயல்­பாக நடிக்க வரு­வ­தாக பாராட்­டி­ய­து­டன் தொடர்ந்து நடிக்­கு­மாறு உற்­சா­க­மூட்­டி­னார் பாக்­ய­ராஜ் சார். அங்­கி­ருந்­து­தான் எனது பய­ணம் தொடங்­கி­யது," என்­கி­றார் சாந்­தினி.

சென்­னை­யில் பிறந்து வளர்ந்­தா­லும் சிறு வய­தில் அதிக படங்­க­ளைப் பார்த்­த­தில்­லை­யாம். வீட்­டில் கண்­டிப்­பு­டன் வளர்த்­துள்­ள­னர்.

தனது இரண்­டா­வது பட­மான 'படித்­துறை'யில் நடிக்­கும்­வரை சினி­மா­வில்­கூட கிரா­மங்­களைப் பார்த்­தது கிடை­யா­தாம். அந்­தப் படத்­தின் கதா­நா­ய­கி­யாக ஒப்­பந்­த­மா­ன­வர் திடீ­ரென வில­கிக் கொண்­ட­தால் சாந்­தி­னியை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

"முதல் நாளன்றே தாமி­ர­ப­ரணி கரை­யி­லுள்ள ஒரு கிரா­மத்­துப் பெண்­ணாக என்னை நடிக்க வைத்­தார் இயக்­கு­நர் சுதா. பாவாடை தாவணி அணிந்து பவானி என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­போது என்னை நானே மறந்து போனேன். சொந்­தக் குர­லில் பேசி நடித்­த­தும் பெரு­மை­யாக இருந்­தது," என்­கி­றார் சாந்­தினி.

அதன்­பி­றகு 'நான் ராஜா­வா­கப் போகி­றேன்', 'வில் அம்பு' என்று அடுத்­த­டுத்து பல படங்­களில் நடித்து முடித்­துள்ள சாந்­தினி முதன்­மு­றை­யாக தெலுங்­கில் 'ராஜா ரங்­குஸ்கி'யில் வில்­லி­யா­க­வும் அசத்­தி­யுள்­ளார்.

'கவண்', 'எட்­டுத்­திக்­கும் பற' உள்­ளிட்ட படங்­க­ளின் மூலம் தொடர்ந்து திரை­யு­ல­கில் தன்னை நிலை­நி­றுத்­திக் கொண்­டுள்ள இவ­ருக்கு தொலைக்­காட்சி தொடர் வாய்ப்­பு­களும் கிடைத்து வரு­கின்­றன.

அதே­ச­ம­யம் பாலாஜி சக்­தி­வேல் இயக்­கத்­தில் 'நான் நீ நாம்', ராதா­மோ­க­னின் 'பொம்மை', இயக்­கு­நர் மணி செய்­யோன் படம் என கோடம்­பாக்­கத்­தி­லும் முக்­கிய நடி­கை­யாக வலம் வரு­கி­றார்.

"தொலைக்­காட்சி தொடர்­களில் நடித்­தால் சினிமா வாய்ப்­பு­கள் பறி­போ­கும் என்­ற­னர். நான் அதை ஏற்­க­வில்லை. என்­னைப் பொறுத்­த­வரை தொலைக்­காட்சி மூலம் கிடைக்­கும் புகழ், நான் நடிக்­கும் படங்களுக்­கான இல­வச விளம்­ப­ர­மாக அமை­வ­தாகவே கரு­து­கி­றேன்.

"இந்­தப் புரி­தல் எனக்கு அண்­மைக் காலத்­தில்­தான் ஏற்­பட்­டது. எனவே தயக்­க­மின்றி தொடர்­க­ளி­லும் சினி­மா­வி­லும் நடித்து வரு­கி­றேன்," என்­கி­றார் சாந்­தினி தமி­ழ­ர­சன்.

சாந்தினி தமிழரசன்

, :   