திரைத் துளிகள்

2 mins read
7cfbe7cf-9b71-455f-af3b-0bff55986e25
-
multi-img1 of 2

விருது: நன்றி தெரிவித்த சேதுபதி

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கை ஷில்பாவாக நடித்து பலத்த பாராட்டுகளைப் பெற்ற விஜய் சேதுபதியின் நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக படத்தின் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்கிறார் விஜய் சேதுபதி.

"திருநங்கையாக நடித்த போது ஒரு மனிதனை சக மனிதன் நிராகரிப்பது என்பது எந்தளவுக்கு வேதனையைத் தரும், எந்தளவு மனம் வலிக்கும் என்பதை உணர முடிந்தது. என் நடிப்பின் மூலம் மற்றவர்களுக்கு அதை சரியாக உணர்த்தி இருக்கிறேன் என்று தோன்றுகிறது. 'சூப்பர் டீலக்ஸ்' வெளியானபோதும் இந்த வார்த்தைகளைத்தான் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டேன். திருநங்கைகள் மீதான மரியாதை, அன்பு மென்மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் சேதுபதி.

கோல்ஃப் விளையாடும் ரகுல் பிரீத்

கோல்ஃப் விளையாட்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் பிரீத் சிங்.

இதுபோன்ற ஒரு சிறந்த விளையாட்டை தாம் அறிந்ததில்லை என்றும் கோல்ஃப் மூலம் சில வாழ்க்கைப் பாடங்களைத் தாம் கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

"சிறு வயதில் தந்தையுடன் கோல்ஃப் திடலுக்குச் செல்வேன். வலுக்கட்டாயமாக அவர் என்னை அழைத்துச் செல்வதாகவும் அது போரடிக்கும் விளையாட்டு என்றும் நினைத்துக் கொள்வேன். ஆனால் கோல்ஃப் விளையாட்டு நம்மை அனைத்து வகையிலும் சமநிலை கொண்ட மனிதராக மாற்றும்.

"இந்த விளையாட்டில் உங்களுக்கென எதிரிகள் இருக்க மாட்டார்கள். எந்த நேரத்திலும் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதை போதிக்கும் இந்த விளையாட்டை நம்பினீர்கள் எனில் நிச்சயம் அதிசயங்கள் நிகழும்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.