ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கும் படம் 'சார்பட்டா பரம்பரை'. பா. ரஞ்சித் இயக்குகிறார். ஆர்யா ஜோடியாக துஷாரா நடிக்கும் இப்படத்தில் கலையரசன், சஞ்சனா நடராஜன், பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் நேற்று சென்னையில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 1980களில் வடசென்னையில் குத்துச்சண்டை விளையாட்டு பிரபலமாக இருந்தது. அச்சமயம் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை அணிகள், வீரர்களைப் பற்றிய படமாக உருவாகிறது 'சார்பட்டா பரம்பரை'. இந்தப் படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு விரைவில் வெளியீடு காண உள்ளது.
கதாபாத்திரங்களின் அறிமுக நிகழ்வு
1 mins read
-

