'எனிமி'க்காக இணைந்த நண்பர்கள்

'எனிமி'க்காக இணைந்த நண்பர்கள்

1 mins read
52b91d7c-4cce-4a64-a8a5-642bce4d0009
-

ஆர்யா, விஷால் நீண்ட இடை­வெளிக்குப் பிறகு இணைந்து நடிக்­கும் படம் 'எனிமி'. ஆனந்த் சங்­கர் இயக்­கு­கி­றார்.

தமிழ் சினி­மா­வில் முன்­னணி நடி­கர்­க­ளாக இருக்­கும் ஆர்யா, விஷால் இரு­வ­ரும் நெருங்­கிய நண்­பர்­கள். இரு­வ­ரும் இணைந்து பாலா இயக்­கிய 'அவன் இவன்' படத்­தில் நடித்­தி­ருந்­தார்­கள். நீண்ட இடை­வெ­ளிக்குப் பிறகு இரு­வ­ரை­யும் இணைய வைத்­துள்­ளது 'எனிமி'.

இப்­ப­டத்தை 'அரிமா நம்பி', 'இரு­மு­கன்', 'நோட்டா' போன்ற படங்­களை இயக்­கிய ஆனந்த் சங்­கர் இயக்கி வரு­கி­றார். இதில் விஷா­லுக்கு ஜோடி­யாக மிர்­ணா­ளி­னி­யும் ஆர்­யா­வுக்கு ஜோடி­யாக மம்தா மோகன்­தா­சும் நடிக்­கின்­ற­னர்.

முதற்­கட்ட படப்­பி­டிப்பு ஹைத­ரா­பாத்­தில் நடந்­தது. அடுத்­தக்­கட்ட படப்­பி­டிப்­பிற்­காக கடந்த மாதம் படக்­குழு துபாய் சென்­றி­ருந்­தது. அங்கு அதி­ரடி சண்டைக் காட்­சி­கள் பட­மாக்­கப்­பட்­டன.

முப்­பது நாள்­க­ளாக துபா­யில் நடை­பெற்று வந்த இரண்­டாம் கட்­டப் படப்­பி­டிப்பு தற்­போது முடி­வுக்கு வந்­துள்­ளது. இறு­திக்­கட்ட படப்­பிடிப்பை சென்­னை­யில் நடத்தத் திட்டமிட்­டுள்­ள­னர்.

"ஆர்­யா­வும் விஷா­லும் முன்­னணி நடி­கர்­க­ளாக இருப்­ப­தற்கு அவர்­க­ளு­டைய அர்ப்­ப­ணிப்­பு­தான் கார­ணம். இந்­தப் படம் இரு­வ­ரை­யும் தமிழ் சினி­மா­வின் அடுத்த தளத்­துக்கு கொண்டு செல்­லும்," என்று நம்­பிக்­கை­யோடு சொல்­கி­றார் இயக்­கு­நர் ஆனந்த் சங்­கர்.