'நாயகிகளின் பொற்காலம்'

'நாயகிகளின் பொற்காலம்'

3 mins read
2b2503f5-42c2-44a9-a018-2a42284081b9
அக்‌ஷரா கவுடா -

வில்­லி­யாக நடிப்­ப­தில் தமக்கு எந்­த­வி­தத் தயக்­க­மும் இல்லை என்­கி­றார் இளம்­நா­யகி அக்­‌ஷரா கவுடா.

'ஆரம்­பம்', 'போகன்' உள்­ளிட்ட படங்­க­ளின் மூலம் தமிழ் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்­த­வர் இவர். இடை­யில் தெலுங்கு தேசம் பக்­கம் சென்­ற­வர் மீண்­டும் தமி­ழில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார்.

விரை­வில் வெளி­யீடு காண உள்ள 'சூர்ப்­ப­னகை', 'இடி­யட்' உள்­ளிட்ட படங்­களில் அக்­‌ஷ­ரா­வைக் காண­மு­டி­யும்.

"ஏன் இரு நாய­கி­கள் உள்ள படங்­களில் தொடர்ந்து நடிக்­கி­றீர்­கள் என்­ப­து­தானே உங்­கள் கேள்வி? எனக்கு முதன்மை நாயகி, இரண்­டாம் நாயகி என்று சொல்­வ­தில் எல்­லாம் அறவே உடன்­பாடு இல்லை. எனக்கு என்ன கதா­பாத்­தி­ரம் தரு­கி­றார்­கள் என்­பதை மட்­டுமே கவ­னிப்­பேன்.

"இயக்­கு­நர்­கள் என்­னி­டம் கதை சொல்­லும்­போது எனக்கு என்ன வேலை என்­பதே எனது முதல் கேள்­வி­யாக இருக்­கும். அதன்­பி­றகே தயா­ரிப்­பா­ளர், நாய­கன் மற்ற நடி­கர், நடி­கை­கள் யார் என விசா­ரிப்­பேன்.

"விரை­வில் திரை­கா­ணும் 'சூர்ப்­ப­னகை' படத்­தில் ரெஜி­னா­வும் உள்­ளார். 'இடி­யட்' படத்­தில் நிக்கி கல்­ரா­ணி­யும் முக்­கிய வேடத்தை ஏற்­றுள்­ளார். ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­க­ளுக்கு கொடுக்­கப்­படும் வேலை­க­ளைச் செய்­கின்­ற­னர், அவ்­வ­ள­வு­தான்," என்று பக்­கு­வ­மா­கப் பேசும் அக்­‌ஷரா, 'சூர்ப்­ப­னகை'யில் வில்­லி­யாக மிரட்டி உள்­ளா­ராம்.

இதில் தமக்கு எந்­த­வி­தத் தயக்­க­மும் இல்லை என்று சொல்­ப­வர், முன்­னணி நாய­க­னாக இருக்­கும்­போதே விஜய் சேது­பதி 'மாஸ்­டர்' படத்­தில் வில்­ல­னாக நடித்­தி­ருப்­பதை சுட்­டிக் காட்­டு­கி­றார்.

"பல ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெளி­யான படம் என்­றா­லும் 'படை­யப்பா' ரம்யா கிருஷ்­ண­னைப் பற்றி ரசி­கர்­கள் இன்­றைக்­கும் பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். 'மாஸ்­டர்' படத்­தில் சேது­பதி சார்­தான் வில்­லன். ஆனால், சேது­பதி கதா­பாத்­தி­ரத்­துக்கு வில்­லன் என்­னவோ விஜய்­தானே?

"அதே­போன்­று­தான் 'சூர்ப்­ப­னகை'யில் எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு எதிர்­மறை சாயல் அதி­கம் இருக்­கும். ஆனால், நான் ஒரு கதா­நா­ய­கி­யா­கவே நினைத்து நடித்­தேன்," என்­கி­றார் அக்­‌ஷரா.

இப்­ப­டத்­தின் இயக்­கு­நர் கார்த்­திக் ராஜு கதையை விவ­ரிக்­கும்­போதே, "இந்­தக் கதா­பாத்­தி­ரத்­தில் உங்­க­ளால் சிறப்­பாக நடிக்­க­மு­டி­யும்," என்று நம்­பிக்கை ஊட்­டி­னா­ராம்.

அவ­ரது வார்த்­தை­க­ளைக் கேட்­ட­போது பெரு­மை­யாக உணர்ந்­த­தா­கச் சொல்­கி­றார். 'இடி­யட்' படம் முழு­நீள நகைச்­சு­வைப் பட­மாக உரு­வாகி இருக்­கிறது என்­றும் மிர்ச்சி சிவா­வு­டன் இணைந்து நடித்­தது நல்ல அனு­ப­வம் என்­றும் சொல்­கி­றார்.

"திரை­யில் மட்­டு­மல்ல நிஜத்­தி­லும் அவர் கல­க­லப்­பான மனி­தர். நல்ல நண்­ப­ரா­கப் பழ­கி­னார். ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் உற்­சா­க­மா­கப் பணி­யாற்­றி­னோம்," என்று சொல்­லும் அக்­‌ஷரா, நல்ல கதைக்­க­ளங்­கள் அமைந்­தால் மட்­டுமே படங்­களில் நடிக்க ஒப்­புக் கொள்­கி­றார். அத­னால்­தான் படங்­க­ளுக்கு இடை­யே­யான இடை­வெளி பெரி­தாக இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

அதிக எண்­ணிக்­கை­யி­லான படங்­களில் நடிக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் தமக்கு எப்­போ­துமே கிடை­யாது என்று குறிப்­பி­டு­ப­வர், மாறு­பட்ட கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் உட­ன­டி­யாக கால்­ஷீட் ஒதுக்­கத் தயார் என்­கி­றார்.

"தமிழ் ரசி­கர்­கள் அறி­வா­ளி­கள். கதை சரி­யாக இருந்­தால்­தான் ஒரு படத்­தைக் கொண்­டா­டு­கி­றார்­கள். யார் நடித்­துள்­ள­னர் என்­பது அவர்­க­ளுக்கு இரண்­டாம் பட்­சம்­தான். இத்­த­கைய ரசனை உணர்­வுக்­காக அவர்­க­ளைப் பாராட்ட வேண்­டும். ரசி­கர்­க­ளின் இந்த நல்ல போக்­கின் கார­ண­மா­கவே கதை­க­ளைத் தேர்வு செய்­வ­தில் கூடு­தல் கவ­னம் செலுத்­து­கி­றேன்," என்று சொல்­லும் அக்­‌ஷரா, தமிழ்த் திரை­யு­ல­கில் இது கதா­நா­ய­கி­க­ளுக்­கான பொற்­கா­லம் என்று வர்­ணிக்­கி­றார்.

நாய­கி­க­ளால் திரை­யு­ல­கில் ஐந்­தாறு ஆண்­டு­கள் மட்­டுமே தாக்­குப்­பி­டிக்க முடி­யும் என்ற கால­கட்­ட­மெல்­லாம் மலை­யேறி விட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், நாய­கி­கள் தனித்து நடிக்­கும் படங்­களும் வசூல் ரீதி­யில் வெற்றி பெறு­வது ஆச்­ச­ரி­ய­மும் மகிழ்ச்­சி­யும் அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நாய­கி­களும் எந்த வய­தி­லும் முதன்மை வேடத்­தில் நடிக்­க­லாம் என உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. நீண்ட காலத்­துக்கு நாய­கி­க­ளா­கத் திரை­யு­ல­கில் வலம் வர முடி­யும் என்­பதை தமிழ்ச் சினிமா நாய­கி­கள் நிரூ­பித்­துள்­ள­னர். இத்­த­கைய கால­க்கட்­டத்­தில் நானும் நடிக்­கி­றேன் என்­ப­தில் பெரு­மை­யாக உணர்­கி­றேன," என்­கி­றார் அக்­‌ஷரா. இப்­போது தமி­ழி­லும் தெலுங்­கி­லும் தலா இரண்டு படங்­களில் ஒப்­பந்­த­மாகி உள்ள இவர் புதுக்­க­தை­க­ளை­யும் கேட்டு வரு­கி­றா­ராம்.