'நட்புக்கு அர்ப்பணிக்கிறேன்'

3 mins read
867f0c77-f511-42ab-9494-547839612a51
விஷ்ணு விஷால் -

'மோகன்­தாஸ்', 'எஃப்.ஐ.ஆர்' என ஒரே­ சமயத்­தில் இரண்டு படங்­க­ளைத் தயா­ரித்து நாயகனாக நடித்து வரு­கி­றார் விஷ்ணு விஷால்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் தனிப்­பட்ட வாழ்க்கை குறித்த விஷ­யங்­க­ளைத் தவிர்த்­து­விட்டு திரை­யு­ல­கம் சார்ந்த விஷ­யங்­கள் குறித்து மட்­டும் அவர் விரி­வா­கப் பேசி­யுள்­ளார்.

'மோகன்­தாஸ்' என்ற பெயர் உடை­ய­வர்­கள் எல்­லாம் மகாத்மா காந்தி ஆகி­விட முடி­யாது. என்­ப­து­தான் அப்­ப­டத்­தின் ஒரு­வ­ரிக் கதை­யாம். சைக்கோ போன்ற ஒரு மன­நோ­யா­ளியை மைய­மாக வைத்து ஒரு கொலை குறித்த விசா­ரணை எப்­படி நடக்­கும் என்­பதை இப்­ப­டம் விவ­ரிக்­கிறது.

"ராட்­ச­சன்' படத்­தில் நாய­க­னாக நடித்து வெற்றி பெற்­றேன். இந்­தப் புதிய படத்­தில் நானே ராட்­ச­சன் ஆ­கி­விட்­டேன். புரி­ய­வில்லை... இதில் எதிர்­மறை கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளேன்," என்று சொல்­லிச் சிரிப்­ப­வர், 'எஃப்.ஐ.ஆர்' படம் இது­வரை தாம் நடித்த படங்­களில் மிகச்­சி­றந்த படைப்­பாக உரு­வாகி வரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

"பொது­வாக உண்­மைக் கதையை அடிப்­படை­யாக கொண்டு உரு­வா­கும் படங்­களை நான் விரும்­பு­வேன். 'எஃப்.ஐ.ஆர்' அத்­த­கைய உண்­மைக் கதை­க­ளைத் தாங்கி வரும் படம்.

"தவ­றா­கக் குற்­றம்சாட்­டப்­பட்ட ஓர் இஸ்லாமிய இளை­ஞன் வாழ்க்­கை­யில் எதிர்­கொள்­ளும் போராட்­டங்­களை விவ­ரிக்­கும் கதை இது. என்­னு­டைய மிக நெருக்­க­மான நண்­பர் இஸ்­லா­மி­யர். எனவே, இந்­தப் படத்தை அவருக்கு அர்ப்­ப­ணிக்­கி­றேன்.

"இஸ்­லா­மிய சமூ­கம் குறித்து சமூ­கத்­தில் ஒரு தவ­றான எண்­ணம் நிலவி வரு­கிறது. அதை இந்­தப் படம் விவ­ரிக்­கும். அண்­மைக் கால­மாக இஸ்­லாம் குறித்­தும் தீவி­ர­வா­தம் குறித்­தும் விவ­ரிக்­கக்­கூ­டிய படங்­கள் தொடர்ந்து வெளி­யா­கின்­றன. 'எஃப்.ஐ.ஆர்' எந்­தக் குறிப்­பிட்ட சமூ­கத்­தி­ன­ரின் மன­தை­யும் காயப்­ப­டுத்­தாது. உண்­மை­யை­யும் யதார்த்­தத்­தை­யும் மட்டுமே வெளிப்­ப­டுத்­தும்," என்று உறு­தி­யளிக்­கி­றார் விஷ்ணு விஷால்.

தமது இரண்டு தயா­ரிப்­பு­களும் திரை­ய­ரங்­கில் வெளி­யீடு காண­வேண்­டும் என்­ப­து­தான் விஷ்ணு விஷா­லின் ஆசை­யாக உள்­ளது.

"நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டும்­படி பல்­வே­று­வி­த­மான தூண்­டு­தல்­கள் நிகழ்­கின்­றன. எனி­னும் திரை­ய­ரங்­கு­களில் ஒன்­று­கூடி ரசி­கர்­கள் கொடுத்த ஆத­ர­வால்­தான் நான் இன்று இந்த நிலை­மை­யில் இருக்­கி­றேன். எனவே, எனது படங்­கள் பெரிய திரை­யில் வெளி­யீடு காண்­ப­தையே விரும்­பு­கி­றேன்.

"எனக்­கென்று ஒரு சக்தி இருக்­கிறது. அதை வைத்து என்­னால் இயன்­ற­வரை முயற்சி செய்து இரு படங்­க­ளை­யும் திரை­ய­ரங்­கில் வெளி­யீடு காண வைப்­பேன்," என்று திட்­ட­வட்­ட­மா­க­வும் எதிர்­பார்ப்­பு­க­ளு­ட­னும் பேசு­கி­றார் விஷ்ணு விஷால்.

இவ­ரது நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யான படம் 'காடன்'. கல­வை­யான விமர்­சனங்­க­ளைப் பெற்­றுள்ள இப்­ப­டத்­தில் ராணா டகு­பதி நாய­க­னா­க­வும் முக்­கி­ய­மான குண­சித்­திர வேடத்­தில் விஷ்­ணு­வும் நடித்­துள்­ள­னர்.

"குண­சித்­திர வேடத்­தில் நடிக்­கச் சம்­ம­திப்­பேனா எனும் சந்­தே­கம் இயக்­கு­நர் பிரபு சால­மன் சாருக்­கும் இருந்­த­தாம். ஆனால் கதை­யைக் கேட்ட உட­னேயே நான் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தும் ஆச்­ச­ரி­யப்­பட்­டார். என்­னைப் பொறுத்­த­வரை நல்ல படங்­களில் எனது பங்­க­ளிப்பு இருக்­க­வேண்­டும்.

"2013ஆம் ஆண்டு வெளி­யான 'இடம், பொருள் ஏவல்' படத்­துக்­குப்­பி­றகு இப்­ப­டி­யொரு முடிவை எடுத்­துச் செயல்­ப­டுத்தி வரு­கி­றேன். அதே­போல் பல திற­மை­யான கலை­ஞர்­க­ளு­டன் ஒரே படத்­தில் நடிக்­க­வும் தயங்­கி­ய­தில்லை.

"எது­வாக இருப்­பி­னும் நான்­தான் கதா­நா­ய­கன் என்று எனக்­குள்ளே சொல்­லிக் கொள்­வேன். 'நீர்ப்­ப­றவை' படத்­தில் நந்­திதா தாஸ், சுனைனா, சமுத்­தி­ரக்­கனி என திறமைவாய்ந்த பல­ரு­டன் இணைந்து நடித்­தேன். இருப்­பி­னும் எனது கதா­பாத்­தி­ரம் தனித்­து­வ­மா­ன­தாக ரசி­கர்­க­ளால் பாராட்­டப்­பட்­டது.

"இதையெல்­லாம் யோசித்­து­தான் படங்­க­ளைத் தேர்வு செய்­கி­றேன்," என்கிறார் விஷ்ணு விஷால்.