இந்தியத் திரையுலகத்தின் பார்வை தற்போது விளையாட்டுத் துறை பக்கம் குவிந்துள்ளது.
கிரிக்கெட் வீரர் கபில்தேவ், இறகுப் பந்து வீராங்கனை சாய்னா நேய்வால், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவர் மிதாலி ராஜ் உள்ளிட்ட பல விளையாட்டுப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தயாராகின்றன.
இந்நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது. சானியா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை டாப்சி ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்.
ஏற்கெனவே மிதாலி ராஜின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் 'சபாஷ் மித்து' படத்தில் நடித்து வருகிறார் டாப்சி. இந்தப் படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் மிதாலி வேடத்தில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.