தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சானியா வேடத்தில் டாப்சி

1 mins read
c7e92c75-84b1-4030-ba58-5961b9d9cb24
-

இந்­தி­யத் திரை­யு­ல­கத்­தின் பார்வை தற்­போது விளை­யாட்­டுத் துறை பக்­கம் குவிந்­துள்­ளது.

கிரிக்­கெட் வீரர் கபில்­தேவ், இற­குப் பந்து வீராங்­கனை சாய்னா நேய்­வால், இந்­தி­யப் பெண்­கள் கிரிக்­கெட் அணித் தலை­வர் மிதாலி ராஜ் உள்­ளிட்ட பல விளை­யாட்­டுப் பிர­ப­லங்­க­ளின் வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­கள் தயாராகின்றன.

இந்­நி­லை­யில் டென்­னிஸ் வீராங்­கனை சானியா மிர்­சா­வின் வாழ்க்­கை­யும் திரைப்­ப­ட­மா­கிறது. சானியா வேடத்­தில் நடிக்க இந்தி நடிகை டாப்சி ஒப்­புக்கொண்­டுள்­ள­தா­கத் தக­வல்.

ஏற்­கெ­னவே மிதாலி ராஜின் வாழ்க்­கை­யைச் சித்­தி­ரிக்­கும் 'சபாஷ் மித்து' படத்­தில் நடித்து வரு­கி­றார் டாப்சி. இந்­தப் படம் குறித்து எதிர்­பார்ப்பு அதி­க­ரித்து வரும் நிலை­யில் மிதாலி வேடத்­தில் நடிக்­க­வும் அவ­ருக்கு அழைப்பு வந்­தி­ருக்­கிறது.