சந்தனக் கடத்தல் வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கே.என்.ஆர்.ராஜா இயக்கும் அப்படத்துக்கு 'மாவீரன் பிள்ளை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இயக்குநரே நாயகனாக நடிக்கிறார். படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியில் விஜயலட்சுமி துப்பாக்கி ஏந்தியபடி காட்சியளிப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மது ஒழிப்பு, தண்ணீர்ப் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது.
போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இருக்கிறார். படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.

