கோடம்பாக்கத்தை முந்தும் 'டோலிவுட்'

4 mins read
49882410-877f-4f59-aa95-9d4432390d81
'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் விஜய். -
multi-img1 of 2

'மாஸ்­டர்' படத்­துக்­குப் பிறகு வெளி­யீடு கண்ட தமிழ்ப் படங்­கள் வசூ­லில் பெரி­தாக சாதித்­த­தாக தக­வல் ஏது­மில்லை. இத­னால் பல தயா­ரிப்­பா­ளர்­கள் பணப்­பி­ரச்சி­னை­யில் சிக்­கி­யுள்­ள­தா­கத் தக­வல்.

இந்­நி­லை­யில் தெலுங்­கில் வெளி­யா­கும் படங்­க­ளின் வசூல் நன்­றாக இருப்­ப­தா­க­வும் அங்கு மேலும் பல படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யீடு காண இருப்­ப­தா­க­வும் தக­வல். கோடம்­பாக்­கத்­திலோ அதற்கு நேர்­மா­றாக புதுப்­ப­டங்­களை வெளி­யிட தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் தயங்கி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

'மாஸ்­டர்' படம் வெளி­யான பிறகு ரசி­கர்­கள் மத்­தி­யில் திரை­ய­ரங்­கு­க­ளுக்­குச் செல்­வ­தில் இருந்த தயக்­கம் மறைந்து போனது. ஏரா­ள­மா­னோர் திரை­ய­ரங்­கு­க­ளுக்கு படை­யெ­டுத்­த­தால் அப்­ப­டம் வசூ­லில் சாதனை புரிந்­தது.

இந்­தித் திரை­யு­ல­கத்­தி­ன­ரும்­கூட 'மாஸ்ட'ரையும் அதன் நாய­கன் விஜய்­யை­யும் பாராட்­டித் தீர்த்­த­னர். இத­னால் கோடம்­பாக்­கத்­தில் உற்­சாக அலை காணப்­பட்­டது. ஆனால், இப்­போதோ நிலைமை தலை­கீழ்.

பொது ஊர­டங்­குக்­குப் பிறகு தமி­ழில் இது­வரை 45க்கும் மேற்­பட்ட படங்­கள் வெளி­யீடு கண்­டுள்­ளன. ஆனால், எந்­தப் பட­மும் வசூல் ரீதி­யில் வெற்றி பெற்­ற­தா­கத் தக­வல் இல்லை. எந்­தப் படத்­துக்­கும் திரை­ய­ரங்­கில் கூட்­டம் தென்­ப­ட­வில்லை என்­றும் இது கவ­லைக்­கு­ரிய நிலைமை என்­றும் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

ஆனால், தெலுங்கு தேசத்­தில் ஆரோக்­கி­ய­மான நிலைமை காணப்­ப­டு­கிறது. அங்கு வாரந்­தோ­றும் குறைந்­த­பட்­சம் மூன்று படங்­கள் வெளி­யீடு காண்­ப­தா­க­வும் அவை மூன்­றுமே குறைந்­த­பட்ச லாபத்தை ஈட்­டு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அண்­மைக் காலத்­தில் ஆறு தெலுங்­குப் படங்­கள் வசூல் ரீதி­யில் பெரும் வெற்­றி­யைப் பெற்­றுள்­ளன. குறைந்த பொருட்­செ­ல­வில் விஜய் சேது­பதி நடித்து வெளி­யான 'உப்­பெண்ணா' தெலுங்­குப் படம் 100 கோடிக்­கும் மேல் வசூல் செய்­துள்­ளது.

"வீட்­டில் இருந்­த­ப­டியே அனைத்து மொழிப் படங்­க­ளை­யும் பார்க்க முடி­யும் என்ற சூழல் உரு­வாகி விட்­டது. எனவே, ரசி­கர்­க­ளைத் திரை­ய­ரங்­குக்கு வர­வைப்­பது அவ்­வ­ளவு எளி­தல்ல. திரை­ய­ரங்கு சென்று படம் பார்ப்­ப­தென்­றால், ஏற்­ப­டக்­கூ­டிய செலவு அவர்­க­ளைத் திகைக்க வைக்­கிறது.

"நுழை­வுச்­சீட்டு, தின்­பண்­டங்­க­ளுக்­கான செலவு, வாகன நிறுத்­து­மிட கட்­ட­ணம் என ஒரு தனி நப­ருக்கு மட்­டும் குறைந்­த­பட்­சம் 500 ரூபாய் செல­வா­கும் என்­றால், குடும்­ப­மாக செல்­லும்­போது ஆகக்­கூ­டிய செலவு நிச்­ச­யம் அதி­கம்­தான். அதே­ச­ம­யம் ஓடிடி எனப்­படும் இணை­ய­த­ளத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான படங்­கள் கொட்­டிக் கிடக்­கின்­றன.

"மேலும், ஒரு முறை பணம் கட்­டி­னால் போதும். ஏரா­ள­மான படங்­கள், தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­கள், இணை­யத் தொடர்­கள், விளை­யாட்­டுப் போட்­டி­க­ளைப் பார்க்க முடி­கிறது. வேலையை முடித்­து­விட்டு நிம்­ம­தி­யாக, நமக்கு வச­திப்­பட்ட நேரத்­தில் படம் பார்க்­க­லாம்.

"ஆந்­தி­ரா­வில் சினிமா காத­லர்­கள் இன்­ற­ள­வும் பழைய ரச­னை­யு­டன் இருக்­கி­றார்­கள். அங்கு திரை­ய­ரங்க கட்­ட­ணங்­களும் குறை­வாக இருப்­பது நல்ல விஷ­யம். குறைந்­த­பட்ச, அதி­க­பட்ச கட்­ட­ணங்­கள் இருப்­ப­தால் அனைத்­துத் தரப்­பி­ன­ரும் திரை­ய­ரங்­குக்­குச் செல்ல முடி­கிறது. ஆனால் தமி­ழ­கத்­தில் 120 ரூபாய்க்­குக் குறைந்து நுழை­வுச்­சீட்டு விற்­கப்­ப­டு­வ­தில்லை," என்­கி­றார் பிர­பல ஒளிப்­ப­தி­வா­ளர் பன்­னீர்­செல்­வம்.

விஜய் படத்தை வெளி­யிட்­ட­போது திரை­ய­ரங்க நுழை­வுச்­சீட்­டுக் கட்­ட­ணம் தொடங்கி, தின்­பண்­டங்­கள் வரை அனைத்து விலை­க­ளை­யும் சகட்­டு­மே­னிக்கு உயர்த்தி விட்­ட­னர். அத­னால், அந்­தப் பக்­கம் போகவே கூடாது என பல ரசிர்­கள் முடிவு செய்­து­விட்­ட­னர்.

"நாங்­கள் கட்­ட­ணத்­தைக் குறைக்­க­மாட்­டோம் என்­றும் தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் நாங்­கள் சொல்­வ­தைத்­தான் கேட்­க­வேண்­டும் என்­றும் திரை­ய­ரங்­கு­கள் தரப்­பில் கட்­ட­ளை­யி­டு­வ­தும் அபத்­த­மா­கவே இருக்­கிறது," என்­கி­றார் எழுத்­தா­ள­ரும் இயக்­கு­ந­ரு­மான கேபிள் சங்­கர்.

மேலும் திரை­ய­ரங்­குக்கு வரும் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்த சில சலு­கை­களை அளிக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­கி­றார்.

"நான்கு நுழை­வுச்­சீட்­டு­கள் வாங்­கி­னால் பாப்­கார்ன் அல்­லது குளிர்­பா­னங்­கள் இல­வ­சம். ஒரு நுழை­வுச்­சீட்­டுக்கு ஒரு தின்­பண்­டம் என்று ரசி­கர்­க­ளின் பாக்­கெட் பழுக்­கா­த­படி பார்த்­துக் கொண்­டால் ரசி­கர்­கள் மகிழ்ச்சி அடை­வார்­கள்," என்­கி­றார் சங்­கர்.

கொரோனா தொற்­றுப் பர­வல் மீண்­டும் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் திரை­யு­ல­கம் மீண்­டும் இயல்பு நிலைக்­குத் திரும்ப குறைந்­த­பட்­சம் ஓராண்­டா­கும் என்­கி­றார் 40 ஆண்டு கால அனு­ப­வம் உள்ள தயா­ரிப்­பா­ள­ரான கேயார்.

அதே­ச­ம­யம் பணப்­பு­ழக்­கம் இல்­லா­த­தும் மக்­க­ளுக்கு கிரு­மித் தொற்று பயம் போகா­த­தும் கவ­னிக்­கப்­பட வேண்­டிய அம்­சங்­கள் என சுட்­டிக்­காட்­டு­கி­றார் தயா­ரிப்­பா­ளர் சிவா.

"ஏரா­ள­மா­னோர் வாழ்­வா­தா­ரப் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ள­னர். வேலை போனது, சம்­ப­ளம் குறைந்­தது, நிலை­யான வரு­மா­னம் இல்­லா­தது எனப் பல கார­ணங்­க­ளால் மக்­க­ளின் மன­நி­லை­யில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தைக் கவ­னிக்க வேண்­டும்," என்­றும் அவர் சுட்­டிக் காட்­டு­கி­றார்.

திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர் சங்­கத்­தின் தலை­வ­ரான திருப்­பூர் சுப்­பி­ர­ம­ணி­யம் சொல்­வ­தை­யும் கவ­னிக்க வேண்டி உள்­ளது.

'மாஸ்­டர்' போன்று நான்­கைந்து படங்­கள் அடுத்­த­டுத்து வெளி­யீடு கண்­டிருந்­தால் ரசி­கர்­கள் மன­நி­றைவு அடைந்­தி­ருப்­பார்­கள். இயல்பு நிலை­யும் திரும்­பி­யி­ருக்­கும் என்­கி­றார் அவர். ஆனால், அண்­மைக் காலத்­தில் வெளி­யான பல படங்­கள் சுமார் ரகத்­தைச் சேர்ந்­தவை என்­ப­தால் ரசி­கர்­கள் அவற்­றைப் பார்க்க ஆர்­வம் காட்­ட­வில்லை என்­றும் கூறு­கி­றார்.

"நடி­கர், நடி­கை­கள் முதல் தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் வரை யாருமே சம்­ப­ளக் குறைப்பு குறித்து பேச தயா­ராக இல்லை. மேலும் தர­மான படைப்­பு­க­ளைத் தரும் ஆர்­வ­மும் பெரும்­பா­லா­ன­ருக்கு இல்லை.

"நயன்­தாரா தொடங்கி நேற்று அறி­மு­க­மான நாய­கி­கள் வரை சம்­ப­ளத்தை உயர்த்­திய வண்­ணம் உள்ளனர். மேலும் வளர்ந்­து­வ­ரும் நாய­கி­களே சம்­ப­ளத்தை உயர்த்­தும்­போது முன்­னணி நடி­கர்­கள் சும்மா இருப்­பார்­களா?

"மேலும் தயா­ரிப்­புச் செல­வைக் குறைப்­ப­தற்­கும் நட­வ­டிக்­கை­கள் எடுப்­பதோ திட்­ட­மி­டு­வதோ இல்லை. இவை­யெல்­லாம் மாறி­னால்­தான் தயா­ரிப்­பா­ளர்­கள் முன்­பு­போல் லாபம் காண­மு­டி­யும். இல்­லை­யெ­னில் சிக்­கல்­தான். ஆனால் இவை­யெல்­லாம் தெலுங்­குத் திரை­யு­ல­கில் சாத்­தி­ய­மா­கிறது. அத­னால் அங்கு சினிமா துறை நல­மா­க­வும் வள­மா­க­வும் உள்­ளது," என்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.