நடிகர் ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு நேரில் வாழ்த்து

நடிகர் ஜெய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு நேரில் வாழ்த்து

1 mins read
4931668a-4857-4db2-96c4-e39e5a292f01
ஜெய் வீட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழும் ஜெய், சிம்பு. படம்: தமிழக ஊடகம் -
Google News Preferred Icon

நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஜெய் தமது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் சிம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ஜெய்யின் பிறந்தநாள் நிகழ்வில் சிம்பு பங்கேற்றுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. அதேபோல, இயக்குநர் சுசீந்திரனும் ஜெய் வீட்டிற்குச் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்திற்குப்பின் சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜெய், தற்போது மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதோடு இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்