கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார் ராய் லட்சுமி.
தமக்கு வரும் 27ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் என்றும் நேற்று முன்தினம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் தமக்கும் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் யார் எனது வருங்கால கணவர் என்பதில் ரகசியம் காக்க விரும்புவதாகவும் ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஏன் இந்த திடீர் திருமணம் என ரசிகர்கள் யோசித்த நிலையில், தனது பதிவின் கடைசி பகுதியில், "இது வேறு ஒருவரின் பதிவு. என்னைப் பற்றி யோசிக்காமல் கைகளை அவ்வப்போது கழுவி சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்," எனும் அறிவுரையுடன் முடித்துள்ளார் ராய் லட்சுமி.
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து பின்னர் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

