இளையர்களைக் கவர வருகிறது 'முருங்கைக்காய் சிப்ஸ்'

இளையர்களைக் கவர வருகிறது 'முருங்கைக்காய் சிப்ஸ்'

1 mins read
4b8c06a3-43d1-4c52-98d7-5923408d0718
'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் சாந்தனு, அதுல்யா ரவி. -

பாக்­ய­ராஜ் மகன் சாந்­தனு நடித்­துள்ள புதுப்­ப­டம் இளை­யர்­கள் மத்­தி­யில் பலத்த எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஸ்ரீஜர் இயக்­கத்­தில் சாந்­தனு, அதுல்யா ரவி இணைந்து நடிக்­கும் படம் 'முருங்­கைக்­காய் சிப்ஸ்'. இதில் பாக்­ய­ரா­ஜும் முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

மேலும் மனோ­பாலா, ஆனந்­த­ராஜ், மயில்­சாமி, மொட்டை ராஜேந்­தி­ரன், யோகி­பாபு, ஊர்­வசி, மது­மிதா உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ளனர்.

"காத­லும் நகைச்­சு­வை­யும் சரி­வி­கி­தத்­தில் கலந்­துள்ள படம் இது. இளை­யர்­க­ளைக் கவ­ரக்­கூ­டிய அம்­சங்­கள் பல உள்­ளன.

"திரு­ம­ண­மான இளம் ஜோடிக்கு முத­லி­ரவு நடக்­கிறது. இதை மைய­மாக வைத்­து கதை நக­ரும். முத­லி­ர­வுக்கு எத்­த­கைய ஏற்­பா­டு­கள் நடக்­கின்­றன என்­ப­தை­யும் அச்­ச­ம­யம் எதிர்­பா­ரா­மல் நிக­ழும் சில சம்­ப­வங்­க­ளை­யும் சுவா­ர­சி­ய­மாக விவ­ரித்­துள்­ளோம்.

"படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. எனவே, படத்­துக்­கும் இதே­போன்ற வர­வேற்பு கிடைக்­கும் என்ற நம்­பிக்கை ஏற்­பட்­டுள்­ளது," என்­கி­றார் இயக்­கு­நர் ஸ்ரீஜர்.

என்­ன­தான் இளை­யர்க்­கான படம் என்று குறிப்­பி­டப்­பட்­டா­லும் மற்­ற­வர்­களும் ரசிக்­கும் வகை­யில் இப்­ப­டம் உரு­வாகி இருப்­ப­தாக தக­வல்.

அண்­மை­யில் 'மாஸ்­டர்' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தார் சாந்­தனு.

இதைக் கிண்­டல் செய்­யும் வித­மாக சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் பதி­விட்­டி­ருந்­த­னர். அதற்கு அவ­ரும் சளைக்­கா­மல் பதி­ல­ளித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இந்­தப் புதிய படம் தன்னை இளை­யர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும் என்று நம்பு­வ­தா­கச் சொல்­கி­றார் சாந்­தனு.