ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள புதிய படம் 'வணக்கம்டா மாப்ள'. ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன்பு 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக 'பிகில்' படப் புகழ் அம்ரிதா ஐயர் நடிக்க, ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இந்நிலையில் இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளது.
தற்போது பெரும்பொருட்செலவில் உருவான படங்கள் திரையரங்குகளில் வெளியீடு காண வரிசையில் காத்திருப்பதால் 'வணக்கம்டா மாப்ள'யை இணையத்தில் வெளியிடுவது என படத்தயாரிப்புத் தரப்பு முடிவு செய்ததாகத் தகவல்.

