யாஷிகா: நான் மாறமாட்டேன்

எத்­த­கைய விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டா­லும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வது என்ற தமது நிலைப்­பாட்­டில் இருந்து யாஷிகா ஆனந்த் மாறு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. இப்­படி இருப்­ப­து­தான் தமது கொள்கை என்­கி­றார்.

பிள்­ளை­கள் பெற்­றோ­ரின் அறி­வு­ரை­யைக் கேட்டு நடப்­பது தவறு என்­றால் அத்­த­வ­றைத் தொடர்ந்து செய்­வ­தில் தமக்கு எந்­த­வித தயக்­க­மும் இல்லை என்று சொல்­லும்­போது யாஷி­கா­வின் குர­லில் உறு­தி­யும் தைரி­ய­மும் தெரி­கிறது.

“போலி­யாக, பொய்­யா­கப் பேசா­விட்­டால் அதை குறை­கூற வேண்­டுமா? ஒரு­சி­ல­ருக்கு இத்­த­கைய மனப்­போக்கு இருப்­பது ஆச்­ச­ரி­ய­மும் வேத­னை­யும் அளிக்­கிறது. பொய்­க­ளைப் பேசு­வது எளிது. ஆனால், என்­றே­னும் ஒரு­நாள் உண்மை வெளிப்­படும். அப்­போது நமது குணா­தி­ச­யத்­தின் பிம்­பம் உடைந்து நொறுங்­கி­வி­டும்.

“எனவே, நல்­லதோ கெட்­டதோ எப்­போ­தும் உண்­மையை மட்­டுமே பேச­வேண்­டும். எந்த காலத்­தி­லும் பெற்­றோ­ரி­டம் பொய் சொல்­லக்­கூ­டாது. அப்­போ­து­தான் நிம்­ம­தி­யா­கத் தூக்­கம் வரும்,” என்­கி­றார் யாஷிகா.

ஒன்­றாம் வகுப்பு படிக்­கும்­போதே இவ­ரது தாயார் இப்­ப­டிப்­பட்ட அறி­வு­ரை­க­ளைக் கூறித்­தான் வளர்த்­தா­ராம்.

தனது தாயா­ரின் அன்­பான அறி­வு­ரை­களும் வெளிக்­காட்­டிய தைரி­ய­மும்­தான் தம்­மைத் துணிச்­சல் மிகுந்த பெண்­ணாக வளர்த்­தி­ருக்­கிறது என்று குறிப்­பி­டும் யாஷிகா, தாம் ஒரு நடிகை, மாடல் அழகி என்­ப­தால் சமூ­கத்­தா­லும் ரசி­கர்­க­ளா­லும் மிக அணுக்­க­மாக கவ­னிக்­கப்­ப­டு­வ­தா­கச் சொல்­கி­றார்.

தாம் வெளிப்­ப­டை­யாக தைரி­ய­மா­கப் பேசு­வ­தற்கு இது­த­தான்­கா­ர­ணம் என்று குறிப்­பி­டு­ப­வர், சில சம­யங்­களில் சமூக அக்­க­றை­யு­டன் தாம் தெரி­விக்­கும் கருத்­து­கள் வேண்­டு­மென்றே சில­ரால் சர்ச்­சை­யாக்­கப்­ப­டு­கிறது என்­கி­றார்.

சென்­னை­யில் இருக்­கும்­போது இவர் வெளியே செல்­வ­தற்கு பெரும்­பா­லும் கார்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை. தனது புல்­லட் வாக­னத்­தில்­தான் வலம் வரு­கி­றார்.

பள்­ளி­யில் ஒன்­ப­தாம் வகுப்பு படிக்­கும்­போதே புல்­லட் ஓட்­டக் கற்­றுக்­கொண்­டா­ராம். ஆனால், 18 வயது ஆன­தும் ஓட்­டு­நர் உரி­மம் பெற்­ற­பி­றகே தனி­யாக இரு­சக்­கர வாக­னத்­தில் செல்­ல­லாம் என்று இவ­ரது தந்தை திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டா­ராம்.

“அது­வரை பொறு­மை­யா­கக் காத்­தி­ருந்து புல்­லட் ஓட்­டும் கனவை நன­வாக்­கி­னேன். எந்த ஒரு தரு­ணத்­தி­லும் தலைக்­க­வ­சம் அணி­யா­மல் ஓட்­ட­மாட்­டேன். பெண்­கள் புல்­லட் ஓட்­டு­வது ஒன்­றும் உலக அதி­ச­ய­மல்ல. பல நாடு­களில் பெண்­கள் புல்­லட்­டில் தைரி­ய­மா­கச் சுற்­று­வ­தைப் பார்த்­தி­ருக்­கி­றேன்.

“என் முகம் தெரி­கி­றதோ இல்­லையோ இளை­யர்­கள் பலர் நான் இரு­சக்­கர வாக­னத்­தில் செல்­லும்­போது அருகே வந்து மோது­வது­போல் தங்­கள் வாக­னத்தை வளைத்து, நெளித்து ஓட்­டு­வார்­கள். அப்­போ­தெல்­லாம் சிரிப்­பாக வரும். புல்­லட் பய­ணத்தை எப்­போ­துமே ரசிப்­பேன்,” என்று சொல்­லும் யாஷிகா அண்­மை­யில் துபாய் சென்­ற­போது ‘ஸ்கை டைவிங்’ செய்து அசத்­தி­யுள்­ளார்.

அது­தொ­டர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் இவர் வெளி­யிட்ட காணொ­ளிப் பதி­வு­க­ளுக்கு ரசி­கர்­க­ளி­டம் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ள­தாம். ‘சல்­பர்’ என்ற தலைப்­பில் உரு­வா­கும், நாய­கியை மையப்­ப­டுத்­தும் கதை­யில் இவர்­தான் நாயகி. காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிக்­கி­றார். அந்­தப் படத்­தில் இடம்­பெ­றும் காட்­சிக்­கா­கத்­தான் இவர் விமா­னத்­தில் இருந்து குதித்து சாக­சம் செய்­யும் காட்சி பட­மாக்­கப்­பட்­ட­தாக வெளி­யான தக­வலை மறுக்­கி­றார்.

“சல்­ஃபர்’ படத்­தில் நிறைய சண்­டைக்­காட்­சி­கள் உள்­ளன. பொது­வாக காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிப்­ப­தற்கு நடி­கை­கள் விஜ­ய­சாந்­தி­யைத்­தான் முன்­மா­தி­ரி­யா­கக் கரு­து­வார்­கள். நானும் அப்படித்­தான். அவ­ரைப் போன்றே ‘டூப்’ இல்­லா­மல் சண்­டைக்­காட்­சி­களில் நடிக்­கி­றேன்.

“அந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்­கான மன­நி­லை­யைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கா­கவே சில சாக­சங்­களில் என்னை வலிய ஈடு­ப­டுத்­திக் கொள்­கி­றேன். ‘சல்­பர்’ படத்­துக்கு இசை­ய­மைத்து எதிர்­மறை நாய­க­னா­க­வும் நடித்­துள்­ளார் சித்­தார்த் விபின்.”

கவர்ச்­சிக்­குத்­தான் எப்­போ­தும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றீர்­க­ளாமே? என்று கேட்­டால் யாஷி­கா­வின் அழகு முகத்­தில் கோபம் எட்­டிப் பார்க்­கிறது. ‘சல்­பர்’ படத்­தில் துளி­கூட கவர்ச்­சிக்கு இட­மி­ருக்­காது என்று சுட்­டிக் காட்­டு­கி­றார்.

“கதா­நா­ய­கியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் படங்­க­ளி­லும் கூட என்னை நடிக்க அழைக்­கி­றார்­கள். ‘சல்­பர்’ மூலம் முதன்­மு­றை­யாக எனது நடிப்­புத் திற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தக்­கூ­டிய வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கிறது. இந்­தப் படம் வெளி­யா­ன­தும் எனது திறமை குறித்து ரசி­கர்­கள் அதி­கம் பேசு­வர். இது நல்ல தொடக்­க­மாக அமைந்­துள்­ளது,” என்­கி­றார் யாஷிகா.

அடுத்து வெங்­கட் ராக­வன் இயக்­கும் ‘கட­மை­யைச் செய்’ என்ற படத்­தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடி­யாக நடிக்­கி­றார். இது குடும்ப நகைச்­சு­வைப் பட­மாக உரு­வா­கிறது.

“கடி­ன­மான காட்­சி­க­ளி­லும் ஒத்­தி­கை­யின்றி ஒரே டேக்­கில் எப்­படி நடிக்­க­வேண்­டும் என்­பதை எஸ்.ஜே.சூர்யா சாரி­டம்­தான் கற்­றுக் கொண்­டேன்,” என்­கி­றார் யாஷிகா.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!