'மாநாடு' படம் சிம்புவின் திரைவாழ்க்கையில் முக்கிய மைல் கல்லாக அமையும் என்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
படப்பிடிப்பின்போது சிம்புவுடனும் பட இயக்குநர் வெங்கட் பிரபுவுடனும் தாம் கலந்துரையாடும்போது எடுத்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"நான் பார்த்தவரை 'மாநாடு' படம் சிம்புவுக்கு மட்டுமல்லாமல் வெங்கட்பிரபுவுக்கும் நல்ல மைல் கல்லாக அமையும். அவர்களுக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்," என சுரேஷ் காமாட்சி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்புவைப் பற்றி பலரும் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு 'மாநாடு' மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

