'பரமபதம் விளையாட்டு' படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு வராததால், அதன் கதாநாயகியான திரிஷா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பட அதிபர் புகார் அளித்துள்ளார்.
திரு இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, சோனா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க திரிஷா மறுத்துவிட்டாராம். இதனால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தாராம் இயக்குநர் திரு.
நிகழ்ச்சியில் பங்கேற்காவிட்டால் நடிப்பதற்குத் தடை விதிக்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுக்க, அதன் பிறகே அவர் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
, :

