திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read

ஆன்ட்ரியாவை பின்பற்றும் ரசிகர்கள்

கோடம்பாக்க நடிகைகள் பலரும் உடற்பயிற்சிக்குதான் இப்போது அதிக நேரம் ஒதுக்கி வருகிறார்கள்.

ரகுல் பிரீத்சிங், நிக்கி கல்ராணி ஆகியோரின் வரிசையில் ஆன்ட்ரியாவும் இணைந்துள்ளார்.

அண்மைக்காலமாக தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களால் வருத்தமடைந்ததாகவும் அதிலிருந்து மீண்டுவர உடற்பயிற்சிதான் கைகொடுப்பதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் உடற்பயிற்சி செய்யும் காணொளியை விரும்புவதாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்நலனப் பேணுவதில் அவரைப் பின்பற்றப் போவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டிருப்பது தமக்கு உற்சாகமளித்திருப்பதாக ஆன்ட்ரியா கூறியுள்ளார்.

பாடல்கள் இல்லாத படத்தில் வாணி

இளையர்களைக் கவர வேண்டுமானால் பாடல்கள் முக்கியம் என்று கருதப்படும் நிலையில், பாடல்களே இல்லாமல் ஒரு தமிழ்ப்படம் உருவாகி வருகிறது. இதில் பரத்தும் வாணி போஜனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

"அறிமுக இயக்குநர் சக்திவேல் சொன்ன திகில் கதை எனக்குப் பிடித்திருந்தது. இதுபோன்ற படங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு அதிகம் இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன்.

"பரத் போன்ற அனுபவ நடிகருடன் இணைந்து நடிப்பது பல வகையிலும் எனக்கு சாதகமாக இருக்கும். மேலும் பாடல்கள் இல்லை என்பதுடன் வேறு சில சுவாரசியமான அம்சங்களும் இப்படத்தில் உள்ளன," என்கிறார் வாணி போஜன்.

இவர் தற்போது விக்ரம் பிரபுவுடன் 'பாயும் ஒளி நீ எனக்கு', சசிகுமாருடன் 'பகைவனுக்கு அருள்வாய்', விக்ரமின் 'சியான் 60', சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கிறார்.