‘இடுப்பழகி’ வெளியிட்ட ரகசியம்

தமன்­னாவை இடுப்­ப­ழகி என்­று­தான் அவ­ரது ரசி­கர்­கள் சமூக வலைத்­தளங்­களில் குறிப்­பி­டு­கின்­ற­னர். இந்­தப் பெய­ரைத் தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தில் தாம் மிகுந்த கவ­னத்­து­டன் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் தமன்னா.

அண்­மைய சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் தமது இடுப்­ப­ழ­கின் ரக­சி­ய­கத்தை வெளி­யிட்­டுள்­ளார்.

நாள் தவ­றா­மல் உடற்­ப­யிற்சி செய்­வது, உண­வுக்­கட்­டுப்­பாடு என்று பல­வற்­றைப் பின்­பற்­றி­னா­லும் தேவை­யான தூக்­கம் இல்­லை­யென்­றால் அழகு பாதிக்­கப்­படும் என்­கி­றார் தமன்னா.

“இடுப்­ப­ழகி என்று ரசி­கர்­கள் குறிப்­பி­டும்­போது மகிழ்ச்­சி­யா­கத்­தான் இருக்­கும். ஆனால் அத்­த­கைய அழ­கைப் பெற நாம் மெனக்­கெட வேண்­டும்.

“தூக்­கம் என்­பது நம் உடல் பாகங்­க­ளுக்­கும் மூளைக்­கு­மான ஓய்வு மட்­டு­மல்ல. அழகு பரா­ம­ரிப்­பி­லும் முக்­கிய பங்கு வகிக்­கிறது.

“மூன்று நாள்­கள் சரி­வ­ர தூங்­க­வில்லை என்­றா­லும் உடல் அமைப்­பும் நல­னும் பாதிக்­கப்­படும். எனவே என்­னைச் சந்­திக்­கும் அனை­வ­ரி­ட­மும் தூக்­கத்­தின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி வரு­கி­றேன்.

“தனிப்­பட்ட முறை­யில் நான் அனு­ப­வித்­ததை, பின்­பற்­றி­யதை மட்­டுமே ரசி­கர்­க­ளி­ட­மும் தெரி­விக்­கி­றேன். கூடு­த­லாக எதை­யும் மிகைப்­ப­டுத்தி பேச­வில்லை,” என்று சொல்­லும் தமன்னா, தமி­ழில் ஒரு படத்­தில் மட்­டுமே தற்­போது நடித்து வரு­கி­றார். எனி­னும் கைவ­சம் தெலுங்­கில் நான்கு படங்­கள் உள்­ள­ன­வாம்.

இதற்­கி­டையே நயன்­தா­ரா­வுக்கு இணை­யாக தமன்­னா­வுக்­கும் தெலுங்­குத் தயா­ரிப்­பா­ளர்­கள் மிகுந்த முக்­கி­யத்­து­வம் அளிக்­கி­றார்­கள்.

தெலுங்­குப் படம் ஒன்­றின் படப்­பி­டிப்­பில் பங்­கேற்க மும்­பை­யில் இருந்து தனி விமா­னத்­தில் ஹைத­ரா­பாத்­துக்குப் பறந்துள்ளார் தமன்னா.

தன்­னு­டன் தனி உத­வி­யா­ளர், ஒப்­ப­னை­யா­ளர், உடை அலங்­கார நிபு­ணர் ஆகி­யோ­ரும் அதே விமா­னத்­தில் சென்­றுள்­ள­னர்.

தமி­ழை­விட இவ­ருக்கு தெலுங்­கில் அதிக சம்­ப­ள­மாம்.

தமன்னா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!